அதிக நேரம் காண்டாக்ட் லென்ஸ்கள் அணிவது கண் எரிச்சல் முதல் கண் தொற்று மற்றும் மங்கலான பார்வை என பல்வேறு கண் சார்ந்த பிரச்சனைகளை உண்டாக்கும். இதில் நீண்ட நேரம் காண்டாக்ட் லென்ஸ் அணிவதால் ஏற்படும் விளைவுகளைக் காணலாம்
கண் வலி
கான்டாக்ட் லென்ஸ்களை தூங்கும் போது அணிவது கருவிழியில் சிராய்ப்புகள் அல்லது கீறல்களை ஏற்படுத்தலாம். இது கண்களில் வலியை உண்டாக்கும். லென்ஸ்கள் கார்னியாவிற்கு ஆக்ஸிஜன் மற்றும் நீரேற்றத்தைத் தடுப்பதால் இந்நிலை உண்டாகிறது
சிவந்த கண்கள்
அடிக்கடி சிவப்பு கண்கள், கண்கள் சேதமடைந்ததற்கான அறிகுறியாகும். இது காண்டாக்ட் லென்ஸை அதிகமாகப் பயன்படுத்துவதன் விளைவாக இருக்கலாம். இது ஒரு கடுமையான நிலை என்பதால் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது
கன்ஜக்டிவிட்டிஸ்
அதிக நேரம் காண்டாக்ட் லென்ஸ்கள் அணிவது கான்ஜுன்டிவாவின் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் கண்களில் கசிவு, அரிப்பு மற்றும் அசௌகரியம் போன்றவை ஏற்படலாம்
கெராடிடிஸ்
இந்நிலை கன்ஜக்டிவிட்டிஸ் நிலையைப் போன்றதாகும். இதில் கண்களுக்கு உள்ளே சேதம் ஏற்படுகிறது. இதன் தீவிர நிகழ்வாக பகுதியளவு பார்வையிழப்பு ஏற்படலாம்
கார்னியல் நியோவாஸ்குலரைசேஷன்
நீண்ட நேரம் காண்டாக்ட் லென்ஸ் அணிவது கண்களுக்குத் தேவையான திரவங்களைப் பெறுவதைத் தடுக்கிறது. இது கண்களுக்கு ஆக்ஸிஜன் வழங்குவதைக் கட்டுப்படுத்துகிறது. இது இரத்த நாளங்களின் அதிகப்படியான வளர்ச்சியை ஏற்படுத்தலாம்