பல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க பல் துலக்கியதும் நாக்கை சுத்தம் செய்வது, ஒவ்வொரு முறை சாப்பிட்டதும் வாய் கொப்பளிப்பது, ஆயில் புலிங் போன்ற பல்வேறு சுகாதார நிலைமைகளை பின்பற்றி வருகிறோம்
மவுத்வாஷ்
இவை நன்மை தருவதாக இருப்பினும், இதற்கு நாம் பயன்படுத்தும் பொருள்கள் சிக்கல்களை ஏற்படுத்தலாம். அதன் படி, வாய் கொப்பளிக்க கடைகளில் விற்கும் மவுத் வாஷ்களைப் பயன்படுத்துகிறோம்
பயன்பாடு
இதை சிலர் காலை அல்லது இரவு நேரங்களில் பயன்படுத்துவர். இன்னும் சிலர் கூடுதல் நன்மைகளைப் பெற விரும்பி, ஒவ்வொரு முறை வாய் கொப்பளிக்கும் போதும் மவுத்வாஷ் உபயோகிப்பர்
பயன்கள்
மவுத்வாஷ் பயன்படுத்துவது வாய் துர்நாற்றத்தை நீக்கி, நல்ல நறுமணத்துடன் வைக்க உதவும். இது வாயில் உற்பத்தியாகக் கூடிய பாக்டீரியாக்களை அழிப்பதுடன், அதனால் ஏற்படும் வாய் சம்பந்தமான பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறது
விளைவுகள்
மவுத்வாஷ் பற்களுக்கு நன்மைகளைத் தந்தாலும் சில இரசாயனங்களும் சேர்க்கப்படுகின்றன. இதனால் மவுத்வாஷை அதிகளவு பயன்படுத்துவது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்
பற்கள் சேதமடைதல்
பெற்றோர்கள் சிலர் குழந்தைகளை மவுத் வாஷைப் பயன்படுத்தி வாயை சுத்தம் செய்ய அனுமதிப்பர். ஆனால், குழந்தைகளின் வாய் மற்றும் பற்கள் மிகவும் மென்மையானது என்பதால், மவுத்வாஷில் உள்ள ஆல்கஹால் அவர்களின் பற்களை சேதப்படுத்தலாம்
மவுத்வாஷை விழுங்கினால்
சில சமயங்களில் மவுத்வாஷில் வாயைக் கொப்பளிக்கும் போது, அது வாயின் உட்பகுதிக்குள் செல்லலாம். இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக உட்செல்லும் மவுத்வாஷால் தலை சுற்றல், தலைவலி, சீரற்ற இதயத்துடிப்பு, வயிற்றுக்கோளாறு போன்றவை ஏற்படலாம்
வாய்ப்புண்
மவுத்வாஷில் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் கொண்ட சில ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது. இதில் ஆல்கஹாலும் உள்ளது. இதனால், மவுத்வாஷை தினமும் பயன்படுத்துவது, வாய்ப் பகுதியின் மென்மையான திசுக்களை சேதப்படுத்தி, அழற்சி மற்றும் புண்களை உண்டாக்கலாம்
வாய் வறட்சி அடைவது
மவுத்வாஷை ஒரு நாளைக்கு அதிகளவு பயன்படுத்தும் போது அதிகளவு வறட்சி உண்டாகும். இதுவே நல்ல பாக்டீரியாக்களை அழித்து கெட்ட பாக்டீரியாக்கள் உருவாகக் காரணமாகிறது