பொதுவாக வயதாகும் போது, உடலில் இயற்கையான கொலாஜன் உற்பத்தி குறைந்து மூட்டுவலி, பலவீனமான எலும்பு, சுருக்கங்கள் போன்றவை ஏற்படும். இதனை கொலாஜன் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்வதன் மூலம் தவிர்க்கலாம்
ஆனால், கொலாஜன் சப்ளிமென்ட்ஸ் எடுத்துக் கொள்வது சில பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதில் கொலாஜன் சப்ளிமெண்ட்ஸ் பயன்படுத்தும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களைக் காணலாம்
தோல் தடிப்புகள்
சிலர் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொண்ட பிறகு தோல் வெடிப்புகள் அல்லது எரிச்சல் போன்றவற்றை சந்திக்கின்றனர். ஏதேனும் அசாதாரண தோல் எதிர்வினைகளைச் சந்தித்தால், சப்ளிமெண்ட்டை நிறுத்தி மருத்துவரை அணுகுவது நல்லது
செரிமான பிரச்சனைகள்
கொலாஜன் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளும்போது சிலருக்கு வீக்கம், மலச்சிக்கல் அல்லது பிற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதனைத் தவிர்க்க ஆரம்பத்தில் ஒரு சிறிய டோஸுடன் தொடங்க வேண்டும்
சிறுநீரக கற்கள்
அதிகப்படியான கொலாஜன் உட்கொள்ளல் காரணமாக சிறுநீரக கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகமாகும். எனவே இவர்கள் சரியான அளவைப் பின்பற்ற வேண்டும்
உயர்த்தப்பட்ட கால்சியம் அளவுகள்
கடல் மூலங்களைக் கொண்ட கொலாஜன் சப்ளிமெண்ட்ஸ் ஹைபர்கால்சீமியாவை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக சோர்வு, குமட்டல் மற்றும் இதயத் துடிப்பு பிரச்சினைகள் போன்றவ ஏற்படலாம்
ஒவ்வாமை எதிர்வினைகள்
முட்டை, மீன் அல்லது மட்டி போன்றவற்றிலிருந்து பெறப்பட்ட கொலாஜன், உணர்திறன் உள்ள நபர்களுக்கு ஒவ்வாமை எதிர்வினைகளைத் தூண்டுகிறது