இன்று மொபைல் போன்கள், டிவி, லேப்டாப் உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அதிக நேரம் திரையில் பார்ப்பதை வழக்கமாகிக் கொள்கின்றனர். இதில் அதிக நேரம் திரையில் பார்ப்பதால் உடலில் ஏற்படும் சில எதிர்மறை விளைவுகளைக் காணலாம்
உடல் பருமன்
டிவி பார்ப்பது அல்லது வீடியோ கேம் விளையாடுவது போன்ற உட்கார்ந்த செயல்களில் அதிக நேரம் செலவிடுவதால் உடல் பருமன் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. கூடுதலாக, நீரிழிவு நோய், இதய ஆரோக்கியம் பாதிப்பு உள்ளிட்டவை ஏற்படலாம்
நாள்பட்ட வலி
அதிக நேர திசை செயல்பாடினால் கழுத்து, முதுகு மற்றும் தோள்களில் வலி ஏற்படுகிறது. எனவே நீண்ட நேரம் உட்காருவதற்குப் பதிலாக நீட்ட அல்லது நடக்க குறுகிய இடைவெளிகளை எடுத்துக் கொள்ளலாம்
மோசமான தூக்கம்
இரவு தூங்கும் முன் அதிகம் திரைகளைப் பயன்படுத்துவதால் தூக்கம் பாதிக்கப்படுகிறது. எனவே படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக குறைந்தது ஒரு மணி நேரமாவது அவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும்
அறிவாற்றல் செயல்பாட்டில் பாதிப்பு
அதிக நேரம் திரை பார்ப்பதால் மன ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படலாம். இது அறிவாற்றல் செயல்பாடுகளின் திறனைக் குறைப்பதுடன், கவனம், நினைவாற்றல், தகவல் செயலாக்க வேகம் போன்றவற்றையும் இழக்கச் செய்கிறது
பதட்டம்
திரையின் முன் அதிக நேரம் செலவிடுவது உணர்ச்சி மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். திரை நேரம் அதிகரிப்பின் காரணமாக பதட்டம், மனச்சோர்வு போன்றவை ஏற்படுகிறது
மனநிலை மாற்றங்கள்
அதிகப்படியான குறுஞ்செய்தி அனுப்புதல் மற்றும் ஸ்க்ரோலிங் செய்வது போன்றவை மனநிலை மாற்றங்களை ஏற்படுத்துகிறது. திரைகளில் அதிக நேரம் செலவிடுதலின் காரணமாக மன அழுத்தம் அதிகமாகிறது