தினமும் பீர் குடிப்பதால் கொடிய நோய்கள் உங்களை தாக்கலாம். தினமும் பீர் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து இங்கே காண்போம்.
வலியில் மூழ்கினாலும், மகிழ்ச்சியில் மிதந்தாலும், பீர் குடிப்பதை ஃபேஷனாக வைத்துள்ளனர் இக்கால இளைஞர்கள். ஆனால் இதில் எவ்வளவு ஆபத்து உள்ளது தெரியுமா? அதிகமாக பீர் குடித்தால், அது கடுமையான உடல்நலக் கேடுகளை ஏற்படுத்தும்.
எடை அதிகரிப்பு
தினமும் பீர் குடித்தால் உடல் எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் ஏற்படும் என எச்சரிக்கப்படுகிறது. பீரின் அதிக கலோரி உள்ளடக்கம் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.
கல்லீரல் பிரச்னை
கல்லீரல் நமது உடலில் ஒரு முக்கியமான உறுப்பு. ஆனால் அதிகமாக பீர் குடிப்பது கல்லீரல் பாதிக்கும். தினமும் குடித்து வந்தால், கல்லீரலைச் சுற்றி கொழுப்பு படிதல், ஆல்கஹால் ஹெபடைடிஸ், கல்லீரல் வீக்கம் போன்ற நோய்கள் வந்து, நாளடைவில் கல்லீரலை சேதப்படுத்தும் என எச்சரிக்கப்படுகிறது.
இதய நோய் அபாயம்
பீர் அதிகமாக குடிப்பது இதய நோய்க்கு வழிவகுக்கும். ஐரோப்பிய ஹார்ட் ஜர்னலின் அறிக்கையின்படி, தினமும் பீர் குடிப்பதால் இருதய நோய்கள் வரலாம், இது மாரடைப்புக்கு வழிவகுக்கும்.
தூக்கமின்மை
பீர் அதிகமாக எடுத்துக் கொண்டால் ஆபத்து. இதனால் உங்களின் தூக்கம் தடைபடும். தினமும் அதிகம் பீர் குடிப்பதால் தூக்கமின்மை பிரச்னை ஏற்படும்.
புற்றுநோய் ஆபத்து
தினமும் பீர் குடித்தால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. அளவுக்கு அதிகமாக பீர் குடிப்பது கல்லீரல், மார்பகம், பெருங்குடல் மற்றும் உணவுக்குழாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். இதில் உள்ள எத்தனால் என்ற பொருள் மனிதனின் டி.என்.ஏ.வை சேதப்படுத்தி புற்றுநோயை விரைவில் உருவாக்கும்.
நீரிழிவு நோய்
தினமும் பீர் குடிப்பதால், இரத்த அழுத்தம் அதிகரித்து, டைப் 2 சர்க்கரை நோய் வரும் அபாயம் உள்ளது.
கருச்சிதைவு
பெண்களில், தினமும் பீர் குடிப்பதால், கருத்தரிப்பதில் சிரமம், கருச்சிதைவு மற்றும் பிறப்பு குறைபாடுகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்