பால் காய்ச்சாமல் பச்சையாக குடித்தால் இவ்வளவு பிரச்சனை வருமா?

By Karthick M
22 May 2025, 03:21 IST

பால் உடலுக்கு நல்லது என்றாலும் அதை காய்ச்சாமல் ஒரு டம்பளராக மொத்தமாக அடிக்கடி குடித்தால் உடலில் என்னவெல்லாம் பிரச்சனைகள் வரும் என்பதை பார்க்கலாம்.

காய்ச்சிய பாலுடன் ஒப்பிடும்போது பச்சைப் பால் எந்த ஊட்டச்சத்து நன்மையையும் கொண்டிருக்கவில்லை என ஆய்வுகள் கூறுகின்றனர்.

காய்ச்சாத பச்சை பாலில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் நமது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை எளிமையாக பாதிக்கும்.

காய்ச்சாத பச்சை பாலை குடிப்பதினால், காசநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிது. நுரையீரலுக்கு தொடர்பில்லாத (EPTB) காசநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

கால்சியம் மற்றும் புரதத்தின் சிறந்த மூலம் பால். காய்ச்சாத பச்சை பாலில் அளவுக்கு அதிகமா காணப்படும் இந்த சத்துக்கள் உடல் பருமனை அதிகரிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.