இஞ்சி தண்ணீர் குடிப்பதில் இத்தனை பிரச்சனைகள் இருக்கா?

By Gowthami Subramani
24 Oct 2024, 15:01 IST

எடையிழப்பு அல்லது வேறு ஏதேனும் நன்மைகளுக்காக சிலர் இஞ்சி தண்ணீர் குடிப்பதை பழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். ஆனால் இது ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருப்பினும், சில பக்கவிளைவுகளும் ஏற்படும் அபாயம் உள்ளது

அலர்ஜி

இஞ்சி டீயைக் குடித்த பிறகு, சிலர் சொறி, எரியும் உணர்வு அல்லது வயிற்றில் ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால், அது அலர்ஜியின் அறிகுறியாக இருக்கலாம். இந்நிலையில் இஞ்சி தண்ணீர் அருந்துவதை நிறுத்தி விட்டு சுகாதார நிபுணரை அணுகுவது நல்லது

பித்த உற்பத்தி

இஞ்சி உடலில் பித்த உற்பத்தியை அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கான உறுதியான ஆதாரம் இல்லை எனினும், பித்த பிரச்சனைகள் இருப்பின், இஞ்சி தண்ணீரைக் குடிக்கும் முன் மருத்துவரை அணுகுவது நல்லது

இரத்த அழுத்தம்

இஞ்சி தண்ணீர் அருந்துவது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இதன் காரணமாக சிலர் தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகளைச் சந்திக்கலாம்

வயிறு எரிச்சல்

சரியான அளவில் இஞ்சி நீர் குடிப்பது பாதுகாப்பானதாக இருப்பினும், அதிகளவு அருந்துவது வயிறு எரிச்சல் போன்ற பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்

இரத்தப்போக்கு

அதிக அளவு இஞ்சி, சப்ளிமெண்ட்ஸ் போன்றவற்றால் இரத்தப்போக்கு ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம். எனவே இரத்தத்தை மெலிக்கும் மருந்தை உட்கொள்பவர்கள் எச்சரிக்கையாக இருப்பவது அவசியமாகும்

நீரிழிவு நோயாளிகள்

சர்க்கரை நோயாளிகள் அதிகளவு இஞ்சி சப்ளிமென்ட்ஸ் எடுத்துக் கொள்வது குறித்து எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும்

கர்ப்பிணி பெண்கள்

கர்ப்ப காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், இஞ்சி தண்ணீர் எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது