பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா?
பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் தமிழக அரசு இதுகுறித்து பிறப்பித்த உத்தரவை பார்க்கலாம்.
கர்நாடகாவில் நடத்தப்பட்ட ஆய்வு
கர்நாடகாவில் நடத்தப்பட்ட ஆய்வில் பானிபூரி உபபொருட்களில் இரசாயனப் பொருட்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்.
புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனம்
பானிபூரி பொருட்களில் சேர்க்கப்படும் மாதிரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தகவல்.
தமிழகத்தில் பானிபூரி கடைகளில் ஆய்வு
இந்த தகவலை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பானிபூரி கடைகளில் ஆய்வு மேற்கொள்ள உணவு பாதுகாப்புத் துறைக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்.
உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு
சென்னை உட்பட பல இடங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளில் பானிபூரி கடைகளில் சோதனை செய்ய தொடக்கம்.
சுகாதாரம் முக்கியம்
தமிழகத்தில் ஆய்வு மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது, இதுவரை எந்த உறுதிப்பட தகவலும் இல்லை. இருப்பினும் மக்கள் சுகாதாரமான உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி அறிவுருத்தப்பட்டுள்ளது.