அன்றாட வாழ்க்கையில் குளிப்பது ஒரு அங்கமாக அமைகிறது. இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நன்மைகளைத் தருகிறது. ஆனால், குளிக்கும் போது சரியாக குளிக்கிறோமா என்பதை நீங்கள் கவனித்ததுண்டா?
குளிக்கும் முறை
பெரும்பாலானோர் குளிக்க தொடங்கும் போது, முதலில் தலையில் நேரடியாக தண்ணீரை ஊற்றி குளிப்பது தவறான செயல் ஆகும். அதிலும் இன்றைய காலத்தில் ஷவர் பயன்பாடு காரணமாக நேரடியாக தலையில் நீரை ஊற்றி குளிப்பது வழக்கமாக்கி விட்டது
தலைப்பகுதியில் ஊற்றலாமா?
முதலில் குளிக்கும்போது தலைக்கு தண்ணீர் ஊற்றுவதை வழக்கமாக்கிக் கொள்கின்றனர். ஆனால், இவ்வாறு செய்வது மூளையின் நரம்புகளை சேதப்படுத்தலாம்
எந்தப் பகுதியில் ஊற்றுவது நல்லது?
வெப்பம் எப்போதும் மேல் நோக்கியே பயணிக்கும் உடலுக்குள் இருக்கும் அக்னி கீழிருந்து மேல் ஏறுவதே சரியாக இருக்கும். எனவே நீரை ஊற்றும் போது காலின் கீழ்ப்பகுதியிலிருந்து படிப்படியாக தொடை, மார்பு அதற்குப் பின் தலைக்குக் கொண்டு வர வேண்டும்
வெப்பம் வெளியேறுதல்
இவ்வாறு காலில் தொடங்கி மேலே உள்ள உறுப்புகள் வரை தண்ணீரை ஊற்றும் போது, உடலின் வெப்பத்தை காது, கண்கள் வழியாக வெளியேற்றுகிறது. ஆனால், தொடக்கத்திலேயே தலை, தோள்களில் நீரை ஊற்றினால், உடலின் வெப்பம் வெளியேறாமல் போய்விடும்
எந்த நீர் சிறந்தது?
குளிப்பது உடலின் வெப்பத்தை குளிர்விப்பதுடன், உடலில் உள்ள அழுக்குகளை வெயியேற்ற உதவுகிறது. குளிர்ந்த நீரில் குளிக்கும் பட்சத்தில், உடலின் வெப்பம் வெளியேற்றப்படும். காலை எழுந்ததும் குளிர்ந்த நீரில் குளிப்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
குறிப்பு
இந்த தகவல்கள் அனைத்தும் மற்ற தகவல்களின் வாயிலாக பெறப்பட்டது. இது போன்ற தகவல்களைப் பெற onlymyhealth உடன் இணைந்து இருங்கள்