மழைக்கால தொற்றுக்கள்
மழைக்காலத்தில் பரவும் வைரஸ்கள் மற்றும் நோய்த்தொற்றுக்கள் சிறியது முதல் பெரிய நோய்களை ஏற்படுத்தலாம். எனவே மழைக்கால ஆரோக்கியத்திற்கு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்
கைகளைக் கழுவுதல்
உணவிற்கு முன்னும், பின்னும் குறிப்பாக வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு நுழையும் போது கைகளைக் கழுவி சுத்தம் செய்வது முக்கியம். குறிப்பாக மழைக்காலத்தில் உணவு உட்கொள்ளும் போது நல்ல கை சுகாதாரத்தைக் கடைபிடிக்க வேண்டும்
தண்ணீர் தேங்குவதைத் தவிர்த்தல்
மழைக்காலத்தில் கொசுக்கள் உற்பத்தி மற்றும் பரவுதலால் பல்வேறு தொற்றுக்கள் ஏற்படலாம். எனவே வீட்டில் திறந்திருக்கும் தண்ணீர் சேமிப்புகளை மூடி வைக்க வேண்டும் மற்றும் வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும்
சுத்தமான மற்றும் வேகவைத்த தண்ணீர்
மழைக்காலத்தில் நீரினால் பரவும் நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே வீட்டில் நீர் வடிகட்டி வைத்திருப்பது அவசியம்.மேலும் கூடுதல் பாதுகாப்புக்காக தண்ணீரைக் கொதிக்க வைத்து அருந்தலாம்
நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்தல்
தெரு உணவுகள் மற்றும் திறந்த வெளியில் விற்பனை செய்யப்படும் உணவுப்பொருள்கள் உண்பதைத் தவிர்க்க வேண்டும். இவை தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களால் பாதிக்கப்படக்கூடியவை என்பதால், இதைத் தவிர்ப்பது நல்லது
பழங்கள், காய்கறிகளைக் கழுவுதல்
பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோல்களில் பல்வேறு வகையான கிருமிகள் இருக்கலாம். எனவே மழைக்காலங்களில் பழங்கள், காய்கறிகளைச் சுத்தம் செய்வதுடன், சுத்தமான மற்றும் புதிதாக சமைத்த வீட்டு உணவைத் தேர்ந்தெடுப்பது நல்லது
நல்ல உறக்கம்
தாமதமான வேலை நேரம் அல்லது ஆரோக்கியமற்ற உறக்கம் போன்றவை உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை சீர்குலைத்து காய்ச்சல் மற்றும் சளி போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். எனவே ஆரோக்கியமான மற்றும் நல்ல தரமான தூக்கத்தைப் பெறுவது சிறந்தது
உடற்பயிற்சி செய்வது
மழைக்காலத்தில் சைக்கிள் ஓட்டுதல், நடைபயிற்சி, யோகா, ஓடுதல் போன்ற செயல்பாடுகள் தடைபட்டாலும், உடற்பயிற்சி செய்வதை நிறுத்த வேண்டாம். இது உடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதுடன், நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. இதன் மூலம் நோய்த்தொற்றுக்களைத் தவிர்க்கலாம்