உஷார்!! முகப்பருக்கள் எங்கு வந்தால் என்ன உடல்நல பிரச்னை?
By Kanimozhi Pannerselvam
02 Feb 2024, 10:45 IST
மேல் நெற்றி
நாம் சாப்பிடக்கூடிய உணவு சரியாக செரிமானம் ஆகவில்லை என்றால், உடலில் நச்சுக்களின் அளவு அதிகரிக்கும் அதன் காரணமாக மேல் நெற்றில் பருக்கள் வரக்கூடும். எனவே உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
புருவங்களுக்கிடையே
கீழ் நெற்றி அல்லது புருவங்களுக்கு இடையே பருக்கள் தோன்ற, போதுமான தூக்கமின்மை, மன அழுத்தம், சீரான ரத்த ஓட்டமின்மை ஆகியவை காரணமாக இருக்கலாம்.
அதிகமாக புகைப்பிடிப்பது, அசுத்தமான காற்று, தலையணையில் உள்ள அழுக்கு மற்றும் தூசுகள் ஆகியவை கன்னங்களில் பருக்களில் வர காரணமாகிறது. மேலும் கன்னங்களுக்கும் குடல் ஆரோக்கியத்திற்கும் தொடர்பு உள்ளது.
மூக்கில் பருக்கள்
மூக்கில் பருக்கள் தோன்றுவது, ரத்த அழுத்தம் காரணமாக இதயத்திற்கு பிரச்சனை உள்ளது என்பதை குறிக்கும் அறிகுறியாகும். அடிக்கடி மூக்கில் பருக்கள் தோன்றினால் ரத்த அழுத்தத்தை பரிசோதிப்பது அவசியம்.
தாடை
ஹார்மோன் ஏற்ற, இறக்கம் காரணமாக தாடைகளில் பருக்கள் ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக மாதவிடாய் சமயங்களில் பெண்களுக்கு இந்த பிரச்சனை அதிகரிக்கும்.
கன்னங்களில் கவனம்
கன்னங்களில் முகப்பருக்கள் தோன்ற அதிக சர்க்கரை உட்கொள்வது காரணமாக இருக்கலாம் என இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். செல்போனை கன்னங்களில் ஒட்டியவாறு நீண்ட நேரம் பேசுவதும் முகப்பருக்கள் எழ காரணமாகிறது.