கருவுறுதலை அதிகரிக்க ஆண்கள், பெண்களுக்கான நட்ஸ் மற்றும் விதைகள்

By Gowthami Subramani
13 Jun 2024, 19:30 IST

வாழ்க்கை முறை, உணவுமுறை ஒட்டுமொத்த ஆரோக்கியம் உள்ளிட்ட பல காரணிகளால் கருவுறுதல் செயல்படுகிறது. கருத்தரிப்பு வாய்ப்புகளை அதிகரிக்க சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்ட நட்ஸ் மற்றும் விதைகளை எடுத்துக் கொள்ளலாம்

பூசணி விதைகள்

பூசணி விதைகள் துத்தநாகம் சத்துக்கள் நிறைந்த மூலமாகும். இது இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒரு கனிமமாகும். இது மாதவிடாய் சுழற்சியை சீராக வைக்கவும், விந்தணு தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது

வால்நட்ஸ்

இது ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த மூலமாகும். இது விந்தணு ஆரோக்கியத்திற்கும் பெண் இனப்பெருக்க அமைப்பின் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கும் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆளி விதைகள்

இந்த விதைகளில் லிக்னான்கள் என்ற ஒரு வகையான பைட்டோ ஈஸ்ட்ரோஜன் நிறைந்துள்ளது. இது ஹார்மோன் அளவை சமப்படுத்த உதவுகிறது. மேலும் இதன் நார்ச்சத்து, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை ஹார்மோன் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது

பாதாம்

இது வைட்டமின் ஈ மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த சிறந்த மூலமாகும். இது கருமுட்டை மற்றும் விந்தணுக்களில் உள்ள டிஎன்ஏவை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கவும், கருவுறுதலை அதிகரிக்கவும் உதவுகிறது

சூரியகாந்தி விதைகள்

இந்த விதைகளில் வைட்டமின் ஈ சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை ஆண்கள் மற்றும் பெண்களின் கருவுறுதலை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இந்த விதைகள் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் பங்கு வகிக்கும் செலினியம் மற்றும் துத்தநாகம் போன்ற அத்தியாவசிய தாதுக்களையும் வழங்குகிறது

ஹேசல்நட்ஸ்

இது சுவையானது மட்டுமல்லாமல், வைட்டமின் ஈ மற்றும் ஃபோலேட்டுகள் நிறைந்த மூலமாகும். இந்த ஃபோலேட் ஆரோக்கியமான கரு வளர்ச்சிக்கு முக்கியமானதாகும். மேலும் இதன் வைட்டமின் ஈ சத்துக்கள் இனப்பெருக்க செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது

சியா விதைகள்

இந்த விதைகளும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த ஊட்டச்சத்துக்களின் ஒரு சிறிய சக்தியாகும். இது இனப்பெருக்க உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், கருவுறுதலை அதிகரிக்கவும் உதவுகிறது