வெள்ளை நிற பற்களுக்கு உதவும் இயற்கை பல்பொடி!

By Karthick M
10 May 2024, 13:51 IST

வெள்ளை மற்றும் பளபளப்பான பற்களை தக்க வைப்பது ஒவ்வொருவரின் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு. இதற்கான இயற்கை பல் பொடியை பார்க்கலாம்.

இயற்கை பல்பொடி செய்ய தேவையான பொருள்

வேம்பு, புதினா இலை, இலவங்கப்பட்டை பொடி, அதிமதுரம், கல் உப்பு, கிராம்பு ஆகியவை 1 டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.

இயற்கை பல்பொடி செய்முறை

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களை மிக்ஸியில் அரைத்து காற்று புகாத டப்பாவில் வைத்து தின:ரி பயந்படுத்தவும்.

பல்பொடி பயன்படுத்தும் முறை

இந்த பல்பொடியை தினசரி காலை ஒரு டீஸ்பூன் எடுத்து மென்மையாக பல்லைத் தேய்த்து சுத்தப்படுத்துங்கள். காலை, இரவு என இரண்டு முறை பயன்படுத்துங்கள்.

இயற்கை பல்பொடி நன்மைகள்

வேம்பு, புதினா மற்றும் அதிமதுரம் ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும். பற்களின் அழுக்குகள், பாக்டீரியாக்களை அழிக்கவும் இது உதவும்.