கொழுப்பு கல்லீரல் பிரச்சனையை சரியாக்க இத ஃபாலோ பண்ணுங்க

By Gowthami Subramani
09 Jul 2024, 09:00 IST

கொழுப்பு கல்லீரல் நோய்

அதிகப்படியான கொழுப்பு, கல்லீரல் உயிரணுக்களில் படிந்து, அதன் செயல்பாட்டை பாதிக்கும்போது கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்படுகிறது. இதன் ஆரம்ப நிலைகள் அறிகுறியற்றவையாக இருப்பினும், வீக்கம் மற்றும் கல்லீரல் பாதிப்புக்கு முன்னேறலாம்

எதனால் ஏற்படுகிறது?

உடல் பருமன் காரணமாக குறிப்பாக வயிற்று கொழுப்பு, டைப் 2 நீரிழிவு, இன்சுலின் எதிர்பு வக, அதிக கொழுப்பு அல்லது ட்ரைகிளிசரைடுகள், விரைவான உடல் எடையிழப்பு மற்றும் அதிகளவு மது அருந்துதல் போன்றவற்றால் ஏற்படுகிறது

பாதுகாப்பு முறைகள்

அன்றாட வாழ்வில் நாம் மேற்கொள்ளும் சில பழக்க வழக்கங்களின் உதவியுடன் கல்லீரல் கொழுப்பு நோயிலிருந்து விடுபடலாம்

ஆரோக்கியமான உணவு

காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் போன்ற உணவுகளை உட்கொள்ளலாம். இது கல்லீரல் கொழுப்பு திரட்சியைக் குறைக்க உதவுகிறது. மேலும் கல்லீரல் செயல்பாட்டை ஆதரிக்க தண்ணீர் மற்றும் மூலிகை டீ போன்றவற்றுடன் நீரேற்றத்தை உறுதி செய்ய வேண்டும்

வழக்கமான உடல் செயல்பாடு

விறுவிறுப்பான நடைபயிற்சி, ஜாகிங் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற ஏரோபிக் பயிற்சிகளில் ஈடுபடுவது கொழுப்பு எரிவதை ஊக்குவிக்கிறது. இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, கல்லீரல் கொழுப்பைக் குறைக்கிறது

சர்க்கரை பானங்களைத் தவிர்ப்பது

அதிக சர்க்கரை பானங்கள் கல்லீரல் கொழுப்பு குவிப்புக்குக் காரணமாகிறது. எனவே இதற்குப் பதிலாக தண்ணீர், மூலிகை தேநீர் அல்லது சர்க்கரை இல்லாத பானங்களைத் தேர்வு செய்யலாம்

சுத்திகரிக்கப்பட்ட ஹார்போஹைட்ரேட் தவிர்த்தல்

வெள்ளை ரொட்டி, பாஸ்தா போன்றவை இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதுடன், கொழுப்பு கல்லீரலை ஊக்குவிக்கலாம். எனவே இந்த வகையான சுத்திகரிக்கப்பட்ட ஹார்போஹைட்ரேட்டுகளைத் தவிர்த்து ஓட்ஸ், குயினோவா போன்ற நார்ச்சத்து மிக்க உணவுகளை சாப்பிடலாம்

மது அருந்துவது

கொழுப்பு கல்லீரல் நோய்க்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பாக ஆல்கஹால் அமைகிறது. எனவே கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மதுவை முற்றிலுமாக கைவிட வேண்டும்

நாள்பட்ட மன அழுத்தம்

அதீத மன அழுத்தம் வீக்கம் மற்றும் கல்லீரல் சேதத்திற்கு வழிவகுக்கும். எனவே யோகா, தியானம், ஆழ்ந்த சுவாசம் போன்ற மன அழுத்தத்தைக் குறைக்கும் நுட்பங்களை முயற்சி செய்யலாம்