நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் இதைச் செய்யுங்க!

By Kanimozhi Pannerselvam
26 Sep 2024, 18:19 IST

புகைபிடித்தல் நுரையீரலை சேதப்படுத்தும் மற்றும் நாள்பட்ட நுரையீரல் நோய் அபாயத்தை அதிகரிக்கும். எனவே நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த புகைப்பிடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

வழக்கமான உடற்பயிற்சி நுரையீரலை மேலும் வலுப்படுத்தி ஆக்ஸிஜன் நுகர்வை மேம்படுத்தும். இதற்கு நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்ற பயிற்சிகளை மேற்கொள்வது மிகவும் நல்லது.

காற்று மாசுபாடு, புகை, தூசி போன்றவை நுரையீரலின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். எனவே தூசி மற்றும் மாசு உள்ள இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிவது நல்லது மற்றும் சுத்தமான காற்றை சுவாசிப்பதும் மிகவும் நல்லது.

ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் நுரையீரலை வலுப்படுத்தும் மற்றும் ஆக்ஸிஜன் உட்கொள்ளலை மேம்படுத்தும். இதற்கு யோகா மற்றும் தியானம் செய்வது மிகவும் நல்லது. நுரையீரல் திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.

நுரையீரலில் உள்ள சளியை வெளியேற்றவும், நுரையீரலை சுத்தமாக வைத்திருக்கவும் நிறைய தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். எனவே தினமும் 8-10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நுரையீரல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. இதற்கு இலைக் காய்கறிகள், பெர்ரி, பருப்புகள், பழங்கள் போன்றவற்றைச் சாப்பிடுவது மிகவும் நல்லது. இது உங்கள் உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.