உங்க சோப்பை மற்றவர்களுடன் பகிர்வது சரியா?

By Gowthami Subramani
26 Oct 2024, 21:35 IST

பல குடும்பங்களில் ஒரே சோப்பைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இது உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கலாம்

சருமத்தில் தொற்று

ஒவ்வொரு நபரின் சருமமும் வேறுபட்டதாகும். இதனால் ஒருவரின் சரும தொற்று மற்ற நபர்கள் பயன்படுத்தும் போது சருமம் பாதிக்கப்படலாம்

சுகாதாரமின்மை

சோப்பு அழுக்காகி இருப்பின், அதைப் பயன்படுத்தும் போது அவர்களின் சருமத்திற்கும் தீங்கு விளைவிக்கலாம்

ஒவ்வாமை பிரச்சனை

ஒரே சோப்பை நீண்ட நேரம் பயன்படுத்துவது, சருமத்தில் அலர்ஜி அல்லது சொறி ஏற்படலாம்

வெவ்வேறு சோப்புகளை பயன்படுத்துதல்

குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் தனக்கென ஒரு தனி சோப்பை வைத்துக் கொள்வதன் மூலம் தோல் தொற்று ஏற்படாமல் தடுக்கலாம்

குழந்தைகளுக்கு சோப்புகள்

குழந்தைகளின் சருமம் உணர்திறன் மிக்கதாகும். எனவே அவர்களுக்கென தனித்தனி லேசான சோப்பை பயன்படுத்த வேண்டும்

நிபுணர் ஆலோசனை

தோல் மருத்துவர்கள் வெவ்வேறு சோப்புகளைப் பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர். குறிப்பாக, குடும்பத்தில் யாராவது சரும நோயால் பாதிக்கப்பட்டிருப்பின் அதைக் கவனித்துக் கொள்வது முக்கியமானதாகும்