தூங்கும் போது சிறுநீர் வெளியேறுவது இயல்பா?

By Karthick M
11 Mar 2024, 00:37 IST

சிறுநீர் வெளியேறும் பிரச்சனை

தூங்கும் போது சிறுநீர் வெளியேறும் பிரச்சனை பலருக்கும் இருக்கும். இது பொதுவான விஷயமா அல்லது ஏதேனும் பிரச்சனை அறிகுறியா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இதுகுறித்து பார்க்கலாம்.

சிறுநீர் கசிவு என்றால் என்ன?

சிறுநீர் கசிவு பிரச்சனை இரவில் தூங்கும் போது மட்டுமல்ல இருமல், தும்மல், அதிகமாக சிரிக்கும் போது ஏற்படும். இந்த சூழ்நிலையில் எந்த நபராலும் தங்கள் சிறுநீர் வெளியேற்றத்தை தவிர்க்க முடியாது.

சிறுநீர் கசிவு காரணங்கள்

சிறுநீர் கசிவு பிரச்சனைக்கு பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். உடல் பருமன், பிரசவத்தால் ஏற்படும் இடுப்புப் பகுதி அழுத்தம், கர்ப்பத்தின் பின் விளைவு, பலவீனமான தசை, நாள்பட்ட நோய் போன்றவைகளால் இந்த பிரச்சனை ஏற்படலாம்.

இரவில் சிறுநீர் வெளியேறுவது இயல்பா?

குறிப்பிட்ட அளவு சிறுநீரை அடக்கி வைப்பது இயல்புதான். ஆனால் அந்த அளவு கூட உங்களால் அடக்கி வைக்க முடியவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுகவும்.

தவிர்க்க வேண்டிய விஷயம்

சிறுநீர் கசிவு பிரச்சனை இருந்தால் காஃபின் உட்கொள்ளலை கட்டுப்படுத்த வேண்டும். சிட்ரஸ் பழங்கள் உட்கொள்ளலை குறைக்கவும்.

முழுமையாக படித்ததற்கு நன்றி

இரவில் அளவுக்கு மீறி சிறுநீர் கசிவு பிரச்சனையை நீங்கள் எதிர்கொண்டால் உடனே மருத்துவரை அணுகுவதே நல்லது.