வார இறுதி நாள்களில் அதிகம் தூங்குவது உடலுக்கு இவ்வளவு நல்லதா?

By Gowthami Subramani
05 Sep 2024, 07:01 IST

வாரத்தின் இடைப்பட்ட நாள்களில் இழந்த தூக்கத்தைப் பெற வார இறுதி நாட்களில் தூங்குவதை பலரும் வழக்கமாக்கிக் கொள்கின்றனர். ஆனால் இது உண்மையில் அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா என்பதை யோசித்ததுண்டா?

குறைவான இதய ஆபத்து

வார இறுதி நாட்களில் நீண்ட நேரம் தூங்குவது, வாரத்தில் தூக்கமின்மையால் உடலில் ஏற்படும் பாதிப்பை ஈடுசெய்கிறது. ஆய்வு ஒன்றில் வார இறுதி நாட்களில் அதிக தூக்கம் உள்ளவர்களுக்கு இதய நோய் வருவதற்கான ஆபத்து 20% குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது

தூக்கம் மற்றும் இதய ஆரோக்கியம்

தூங்கும் போது ஒரு நபரின் இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் குறைகிறது. இந்நிலையில், எவ்வளவு குறைவாக தூங்குகிறோமோ, மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அதிகமாக இருக்கலாம். இந்த அதிக கார்டிசோல், வீக்கம் மற்றும் இரத்த உறைதலை ஏற்படுத்தலாம்

நீரிழிவு பாதிப்பு

போதுமான தூக்கம் இல்லாத காரணத்தால், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் ஹார்மோன்களின் உற்பத்தி பாதிப்படையலாம். இது இன்சுலின் எதிர்ப்பு மற்றும் பிற இதய அபாயங்களுக்கு வழிவகுக்கும்

வார இறுதி தூக்கம்

வார இறுதி தூக்கத்தை உறுதிப்படுத்தினாலும், இந்த தீர்வு நடைமுறையில் இருக்காது எனக் கூறப்படுகிறது. ஏனெனில் தூக்க பற்றாக்குறையை ஈடுகட்ட நீண்ட மணி நேரம் தூக்கம் தேவைப்படுகிறது

எவ்வளவு தூக்கம் தேவை

ஒவ்வொரு வாரமும் ஐந்து நாட்கள் தூக்கமின்மையை ஈடுசெய்ய வார இறுதியில் 48 மணிநேரத்திற்கு மேல் தேவைப்படுகிறது. இது தவிர, எழுந்திருக்கும் மற்றும் தூங்கும் நேரத்துடன் ஒத்துப்போவதை தூக்க சுகாதாரம் குறிக்கிறது

என்ன செய்யலாம்?

இதய ஆரோக்கியம் தவிர, இன்னும் பிற உடல் நல பிரச்சனைகளைத் தவிர்க்க முதலில் தூக்கமின்மையைத் தவிர்க்க வேண்டும். தினமும் குறைந்தபட்சம் 6 முதல் 7 மணி நேரம் தூங்குவதை உறுதி செய்ய வேண்டும். சீரான தூக்க அட்டவணையைப் பராமரிப்பது மிகவும் அவசியமாகும்