இரவு உணவுக்கு பின் ஸ்வீட் சாப்பிடும் பழக்கம் பலரிடம் இருக்கும், உண்மையில் இரவு உணவுக்கு பின் ஸ்வீட் சாப்பிடுவது நல்லதா, கெட்டதா என்பதை பார்க்கலாம்.
எடை அதிகரிப்பு
இரவு உணவுக்கு பின் இனிப்பு சாப்பிட்டால் உடலில் கலோரி அளவுகள் கூடி, உடல் எடை அதிகரிக்கக் கூடும்.
பசி அதிகரித்தல்
இரவு உணவுக்கு பின் தினசரி இனிப்பு சாப்பிட்டால் நாள் முழுவதும் இனிப்பு சாப்பிடும் ஆசையை தூண்டி, இனிப்பு பசியை அதிகரிக்கும்.
இரத்த சர்க்கரையில் மாற்றங்கள்
இனிப்புகளை உட்கொள்வது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை விரைவாக அதிகரிக்கிறது. மேலும், ஆற்றல் மட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
பல் ஆரோக்கிய விளைவுகள்
அதிக சர்க்கரை நிறைந்த இனிப்புகளை வழக்கமாக உட்கொள்வது, பல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும்.