நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதால் என்னாகும் தெரியுமா?

By Gowthami Subramani
03 Feb 2025, 19:25 IST

உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியமாகும். ஆனால், நின்று கொண்டு தண்ணீர் அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இதில் நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் விளைவுகளைக் காணலாம்

செரிமான பாதிப்பு

நின்று கொண்டு தண்ணீர் அருந்தும் போது செரிமான செயல்முறை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஏனெனில் நிற்கும் போது உடல் பதட்டமாக இருப்பதால் செரிமானப் பாதை வழியாக நீர் மிக விரைவாக செல்லும். இந்த அவசரம், ஊட்டச்சத்து உறிஞ்சுவதில் சிக்கல்களை உண்டாக்கலாம். இது காலப்போக்கில் வீக்கம், அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்

சிறுநீரக செயல்பாடு பாதிப்பு

நிற்கும் நிலையில் தண்ணீரை வேகமாக உட்கொள்வதால், சிறுநீரகங்களில் தேவையான வடிகட்டுதல் செயல்முறை தவிர்க்கப்படுகிறது. இதனால் முக்கிய உறுப்புகளில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தலாம். காலப்போக்கில் சிறுநீரக செயல்திறனைக் குறைக்கிறது

வீக்கம் அதிகரிப்பு

நின்று கொண்டு தண்ணீர் அருந்துவது அடிக்கடி வேகமாக நுகர்வதற்குக் காரணமாகிறது. இது தண்ணீர் மட்டுமல்லாமல், அதிகப்படியான காற்று உட்கொள்ளலுக்கும் வழிவகுக்கலாம். இதனால் உட்செல்லும் காற்று செரிமான அமைப்பில் சிக்கி வீக்கம், வாயு போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும்

நுரையீரல் பாதிப்பு

நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதால் உடலில் தேவையான சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்றவை கல்லீரல் மற்றும் செரிமான மண்டலத்தை சென்றடையாது. ஏனெனில் நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும் போது தண்ணீர் மிக வேகமாக உடலில் பயணிக்கிறது. இது நுரையீரல் மற்றும் இதய செயல்பாட்டை பாதிக்கலாம்

தொண்டை அசௌகரியம்

நின்று தண்ணீர் குடிக்கும் போது, அது அதிக சக்தியுடன் கீழ் உணவுக்குழாயைத் தாக்கும் அபாயம் ஏற்படலாம். இதனால் தொண்டையில் அசௌகரியம் அல்லது தற்காலிக சுருங்குதல் போன்ற உணர்வுகள் ஏற்படும். குறிப்பாக, இது எரிச்சலை உண்டாக்கலாம்

மூட்டு, எலும்பு ஆரோக்கிய பாதிப்பு

நிற்கும் போது தண்ணீர் அருந்துவது உடலின் திரவ சமநிலையை சீர்குலைக்கலாம். இதனால் மூட்டு, எலும்பு பிரச்சனைகள் ஏற்படலாம். இந்நிலையில் தண்ணீரை விரைவாக உட்கொள்வது மூட்டுகளில் திரவங்கள் குவிவதற்கு வழிவகுக்கலாம்