ஈரப்பதமூட்டிகள் என்பது ஒரு குறிப்பிட்ட அறையில் உள்ள வறண்ட காற்றில் ஈரப்பதத்தைச் சேர்க்கும் வீட்டு உபயோகப் பொருள் ஆகும். இதனைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் விளைவுகளைக் காணலாம்
காய்ச்சல் அபாயத்தைக் குறைக்க
ஈரப்பதமூட்டியைப் பயன்படுத்துவது காற்றில் சேர்க்கப்பட்ட இன்ஃப்ளூயன்ஸா வைரஸை செயலிழக்க வைத்து, வைரஸின் வீரியம் குறைக்கிறது. இதன் மூலம் காய்ச்சல் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது
உலர் இருமல்
வறண்ட காற்று வறண்ட இருமலை மேலும் மோசமாக்கலாம். வறண்ட காற்றில் ஈரப்பதத்தை சேர்ப்பது வறண்ட இருமலுக்கு உதவுகிறது. குறிப்பாக தூக்கத்தின் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
குறட்டை
இரவில் அறையில் ஈரப்பதமூட்டி பயன்படுத்துவது நாசி துவாரங்களை ஈரப்பதமாக வைத்திருக்கிறது. இதன் மூலம் குறட்டை ஏற்படுவதைக் குறைக்கிறது
டான்சிலிடிஸ்
ஈரப்பதமூட்டி டான்சிலிடிஸ் பிரச்சனைக்கு உதவுகிறது. குறிப்பாக, குழந்தைகளில் டான்சில்கள் வீக்கமடைந்து தொண்டை வலியை ஏற்படுத்தலாம். இதனைத் தவிர்க்க ஈரப்பதமூட்டி உதவுகிறது
மூக்கில் இரத்தப்போக்கு
மூக்கில் இரத்தப்போக்கு வடிவதற்கு ஈரப்பதமூட்டியைப் பயன்படுத்தலாம். வறண்ட காற்று மூக்கின் உள் சவ்வுகளை உலர்த்தி, இரத்தப்போக்கிற்கு வழிவகுக்கும். இதைத் தடுக்க ஈரப்பதமூட்டி உதவுகிறது
சரும ஆரோக்கியத்திற்கு
சருமம் இயற்கையாகவே ஈரப்பதத்தை உறிஞ்சி நீரேற்றமாக வைக்க ஈரப்பதமூட்டி உதவுகிறது. இது சருமம் வறண்டு போகாமல் பாதுகாக்க உதவுகிறது
குறிப்பு
ஈரப்பதமூட்டி இது போன்ற ஏராளமான நன்மைகளைத் தந்தாலும், சில பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடியதாகும். எனவே வேறு சில உடல்நல பிரச்சனைகள் உள்ளவர்கள் நிபுணர்களின் பரிந்துரைப்படி பயன்படுத்துவது நல்லது