கோடை கால வியர்வை
கோடை காலத்தில் வியர்வை வருவது பொதுவானது தான். ஆனால் அதிகமாக வியர்த்தால் சில நோய்களை ஏற்படுத்தலாம். அதிக வியர்வையால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பார்க்கலாம்.
ஹைப்பர்ஹைட்ரோசிஸ் பிரச்சனை
சிலருக்கு அதிகம் வியர்க்கும் இந்த பிரச்சனை ஹைப்பர்ஹைட்ரோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. அதிய வியர்வை பிரச்சனை இருந்தால் மருத்துவர் ஆலோசனை பெறுவது முக்கியம்.
சர்க்கரை நோய்
நீரிழிவு நோயால் உடலில் அதிக வியர்வை ஏற்படுகிறது. நீரிழிவு நோயில் உடல் அட்ரினலின் என்ற ஹார்மோன் வெளியிடத் தொடங்குகிறது. இதன்காரணமாக உடல் அதிகமாக வியர்க்கத் தொடங்கும். இத்தகைய நிலையில் உங்கள் சர்க்கரை அளவை சரிபார்ப்பது முக்கியம்.
பதற்றம்
மன அழுத்தத்தில் இருப்பவர்கள் அதிகமாக வியர்வை பிரச்சனை எதிர்கொள்கிறார்கள். வேறு சில மன நோய்களாலும் இந்த பிரச்சனை ஏற்படலாம்.
தைராய்டு
அதிக வியர்வை காரணமாக தைராய்டு பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும். ஹைப்பர் தைராய்டிசம் ஏற்பட்டால் உங்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படலாம்.
நரம்பு மண்டல கோளாறு
அதிகப்படியான வியர்வை காரணமாக நரம்புகள் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். நரம்பு கோளாறுகள் நிறைய வியர்வையை ஏற்படுத்தும். அதிக வியர்வை ஏற்பட்டால் நரம்பு மண்டலத்தை சரிபார்க்கவும். அதிகப்படியான வியர்வை உடலில் இந்த அனைத்து பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது.