RO நீர் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. எனினும், இது சில சாத்தியமான குறைபாடுகளையும் கொண்டுள்ளது. இதில் RO வாட்டர் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா என்பது குறித்து காண்போம்
சுத்திகரிப்பு நீர்
இந்த RO நீரானது மிகவும் சுத்திகரிக்கப்படுகிறது. இது பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை நீக்குகிறது. இது குடிநீருக்கு பாதுகாப்பானதாக அமைகிறது
சுவையான நீர்
RO தண்ணீர் நன்றாக சுவையாக இருப்பதுடன், எந்த வித வாசனையையும் கொண்டிருக்காது. மேலும், இது குடிப்பதை இன்னும் சிறப்பாக்குவதால் மக்கள் அதிகளவில் குடிக்க விரும்புகின்றனர்
கனிமங்களை நீக்குதல்
RO தண்ணீர் சுத்திகரிக்கும் போது பாக்டீரியா, வைரஸ்கள் மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான கால்சியம், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களை நீக்குகிறது
சுற்றுச்சூழல் பாதிப்பு
RO அமைப்புகள் பொதுவாக சுத்திகரிப்பு செயல்பாட்டின் போது கணிசமான அளவிலான தண்ணீரை வீணாக்குகிறது. இது சுற்றுச்சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே தண்ணீரைச் சேமிக்க சில நுட்பங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்
எப்போது சிறந்தது?
தண்ணீரின் தரம் மிகவும் மோசமாக இருக்கும் இடங்களில் இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. அதே சமயம், இதிலிருந்து நீக்கப்படும் தாதுக்களை நம் அன்றாட உணவின் மூலமாக பெறுவது அவசியம்