தினமும் பால் டீ குடிப்பதில் என்னென்ன சிக்கல்கள் இருக்கு தெரியுமா?

By Gowthami Subramani
06 May 2024, 13:30 IST

இன்று பலரும் தேயிலை டீயை விரும்பி அருந்துவர். எனினும் இது சில தவிர்க்க முடியாத பக்க விளைவுகளை உண்டாக்கலாம். தினமும் பால் டீ குடிப்பதால் ஏற்படும் சில பக்க விளைவுகளைக் காணலாம்

தலைவலி

அதிகப்படியான பால் டீ அருந்துவதால் நீரிழப்பு ஏற்படலாம். இது தலைவலி பிரச்சனையை உருவாக்கலாம்

மனக்கவலை

கவலையால் பாதிக்கப்பட்டவர்கள் தேநீர் அருந்துவது, அறிகுறிகளை மோசமாக்கலாம். அதாவது இவர்கள் தொடர்ந்து தேநீர் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்

நீரிழப்பு

பால் டீயில் காஃபின் நிறைந்துள்ளதால், இது நீரிழப்புக்கு வழிவகுக்கலாம். குறிப்பாக, அதிகளவு உட்கொள்வது நீரிழப்பை ஏற்படுத்தலாம்

வீக்கம்

தேநீரில் நிறைந்துள்ள காஃபின் வயிறு வீக்கத்தை உண்டாக்கலாம். இந்த பால் டீ ஆனது அதிக அமிலத்தன்மை கொண்டதாக மாறும். இது வீக்கத்தை உண்டாக்கி பிரச்சனையை ஏற்படுத்தலாம்

தூக்கமின்மை

ஒருவர் நிறைய தேநீர் அருந்துவது அல்லது படுக்கைக்கு முன் அருந்துவது தூக்க சுழற்சியை பாதிக்கலாம். இதற்கு இதில் உள்ள காஃபின் காரணமாகும்

இரத்த அழுத்த ஏற்றத்தாழ்வு

அதிகப்படியான பால் டீ உட்கொள்ளல் ஆனது இரத்த அழுத்தத்தை சமநிலையற்றதாக மாற்றுகிறது. இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம்