உடல் ஆரோக்கியமா இருக்க நீங்க வீட்டில் வளர்க்க வேண்டிய செடிகள்

By Gowthami Subramani
22 May 2024, 17:30 IST

இயற்கையோடு இணைந்திருப்பது புதிய ஆக்ஸிஜனை வழங்குவதுடன், உடலின் ஒட்டுமொத்த நல்ல ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது

மரங்கள் அல்லது பசுமையானது காற்றின் தரத்தை மேம்படுத்துவதுடன், இதய நோய்கள் மற்றும் இருதய நோய்களால் ஏற்படும் இறப்பு அபாயத்தையும் குறைப்பதற்கு வழிவகுக்கிறது

0.10 அலகு அளவிலான பசுமையின் ஒவ்வொரு அதிகரிப்பும், இதய நோய்களால் ஏற்படும் இறப்புகளை 100,000 க்கு 13 ஆக குறைவதாகக் கூறப்படுகிறது

வீட்டிலேயே வளர்த்தக்கூடிய சில உட்புறச் செடிகள் அழகாக இருப்பதுடன், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது

கற்றாழை

இது சிறந்த மற்றும் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட தாவரமாகும். இந்த கற்றாழை அழற்சி எதிர்ப்பு மற்றும் சருமத்தை அமைதிப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் தடிப்புத் தோல், மற்றும் குளிர் புண்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது

ஸ்நேக் பிளான்ட்

ஸ்நேக் பிளான்ட் மிகவும் பிரபலமான உட்புற தாவரங்களில் ஒன்றாகும். இது உட்புற காற்றின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இதிலுள்ள ஃபார்மால்டிஹைட், டோலுயீன், பென்சீன் போன்றவை சில வகையான நச்சுகளை காற்றில் இருந்து நீக்க உதவுகிறது

லாவெண்டர்

ஒரு அழகான பூக்கும் தாவரமாகும், இது மிகவும் மென்மையான மற்றும் இனிமையான வாசனையைக் கொண்டது. இது மன அழுத்தத்திலிருந்து விடுபடவும், மனச் சோர்விலிருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது

ரோஸ்மேரி

இது இந்திய குடும்பங்களில் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படும் சிறந்த மூலிகையாகும். ரோஸ்மேரி அத்தியாவசிய எண்ணெய் நினைவக சக்தி மற்றும் செறிவை மேம்படுத்த உதவுகிறது

சிலந்தி செடிகள்

அழகான நீண்ட இலைகள் கொண்ட சிலந்தி செடிகள் வீட்டில் காற்றின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. வீட்டு வண்ணப்பூச்சு, ரப்பர் போன்றவற்றில் உள்ள சில இரசாயனங்களை காற்றில் இருந்து அகற்ற உதவுகிறது