மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்!

By Karthick M
04 Jul 2024, 01:00 IST

மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து எளிதாக பருவ கால நோய்களால் பாதிக்கப்படுவார்கள். எனவே இதை வலுப்படுத்த குறிப்பிட்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

சுரைக்காய்

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த சுரைக்காயை உட்கொள்ளலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் பொட்டாசியம், இரும்பு, செலினியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த இது உதவுகிறது.

ப்ளம்ஸ்

ப்ளம்ஸ்-ல் உள்ள வைட்டமின் சி, கே, இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெருமளவு உதவுகிறது.

முழுமையாக படித்ததற்கு நன்றி

மழை காலத்தில் ஆரோக்கியமான உணவுகள் உண்பது மிக அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருப்பது மிக மிக முக்கியம்.