பற்சொத்தை பிரச்சனையை விரைவில் போக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்

By Gowthami Subramani
27 Feb 2024, 06:23 IST

வாயில் உள்ள சில பாக்டீரியாக்கள் மாவுச்சத்து மற்றும் சர்க்கரையிலிருந்து அமிலத்தை உருவாக்குகிறது. இவை பற்களின் மேல் அடுக்கை படிப்படியாக பலவீனப்படுத்துகிறது. இதனால் பற்களில் துளைகள் உருவாகும். இது குழி அல்லது புழு தொற்று எனப்படுகிறது

இனிப்பு பொருள்கள்

அதிக இனிப்புகள், இனிப்பு குளிர்பானங்கள் மற்றும் ஒட்டும் உணவுகள் போன்றவை பாக்டீரியாவை ஊக்குவிக்கிறது. இவை துவாரங்களை வேகமாக வளரச் செய்து பாதிப்பை ஏற்படுத்துகிறது

ஃப்ளூரைடு பேஸ்ட்

ஃப்ளூரைடு பற்பசையை ஒரு நாளைக்கு காலை மற்றும் இரவு என இரு முறையும் குறைந்தது 2 நிமிடங்களுக்கு துலக்க வேண்டும்

Floss செய்வது

பற்களுக்கு இடையில் மறைந்துள்ள உணவுத் துகள்கள் அல்லது பாக்டீரியாக்களை அகற்ற ஃப்ளோசிங் செய்யலாம்

தண்ணீர் குடிப்பது

சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதன் மூலம் வாயை சுத்தம் செய்யலாம். இதனுடன், இனிப்பு உணவு சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது

பச்சைக் காய்கறிகள் சாப்பிடுவது

பச்சை காய்கறிகள், பழங்களை சாப்பிடுவதன் மூலம் பற்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்களைப் பெறலாம்

வழக்கமான சோதனை செய்வது

ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் பல் மருத்துவரிடம் பரிசோதனை செய்யவும். இதன் மூலம் துளைகளின் ஆரம்ப நிலையிலையை அடையாளம் கண்டு நிரப்பி, பெரிய சேதத்தைத் தடுக்கலாம்