5 நிமிடத்தில் தலைவலியை போக்குவது எப்படி?

By Karthick M
13 Mar 2024, 02:27 IST

அடிக்கடி தலைவலி பிரச்சனை

பலர் அடிக்கடி தலைவலி பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். சில சமயங்களில் இந்த தலைவலி பொறுத்துக் கொள்ள முடியாதாக இருக்கும். இதில் இருந்து உடனடியாக விடுபடுவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

இலவங்கப்பட்டை பேஸ்ட்

தலைவலியில் இருந்து விடுபட இலவங்கப்பட்டை பொடியை தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்யவும். இதை அரை மணிநேரம் நெற்றியில் தடவி பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

இஞ்சி

இஞ்சியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். இதற்கு இஞ்சி டீயுடன் எலுமிச்சை சாறு குடிக்கலாம்.

கிராம்பு

கிராம்பை நசுக்கி மஸ்லின் துணியில் கட்டிவிடுங்கள். இதை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நெற்றியில் சிறிது நேரம் தடவவும்.

தலைவலி நிவாரணம் பெற வழிகள்

தலைவலியில் நீங்கள் நிவாரணம் பெற மசாஜ் மற்றும் அக்குபிரஷரின் உதவியை எடுத்துக் கொள்ளலாம். அதேபோல் உடலை நீரேற்றமாக வைத்திருங்கள். நீண்ட நேரம் வெறும் வயிற்றில் இருக்க வேண்டாம்.

முழுமையாக படித்ததற்கு நன்றி

இந்த வழிகளை பின்பற்றி நீங்கள் தலைவலியில் இருந்து நிவாரணம் பெறலாம். அதேபோல் உங்களுக்கு ஏதேனும் தீவிர பிரச்சனை இருக்கும் பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.