வயிற்றில் அதிக வாயு உள்ளதா? சரிசெய்ய எளிய வழிகள்!

By Karthick M
29 Dec 2023, 02:32 IST

வாயு தொல்லை சரியாக வழிகள்

முறையற்ற உணவு முறைகளால் வயிற்றில் அதிக வாயு சேருகிறது. இதனால் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. வயிற்றில் சேரும் வாயுவை சரிசெய்ய என்ன செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

வெந்தய நீர்

இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது அஜீரணம் மற்றும் வாயுவில் இருந்து நிவாரணம் அளிக்கும். வயிறு தொடர்பான பிற பிரச்சனைகளை நீக்கவும் இது உதவும்.

புதினா டீ

செரிமான பிரச்சனையில் இருந்து விடுபட புதினா டீயை அருந்தலாம். இது வாந்தி மற்றும் குமட்டலில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

வஜ்ராசனம் செய்யவும்

வஜ்ராசனம் செய்வதன் மூலம் வயிற்றில் உள்ள வாயுவை வெளியேற்றலாம். 5-6 நிமிடம் தொடர்ந்து இதை செய்வதன் மூலம் ஏணைய நன்மைகள் கிடைக்கும்.

பெருங்காயம்

பெருங்காயத்தை தொப்பிலில் பூசினாலும் சரி, தண்ணீரில் கலக்கி குடித்தாலும் சரி, வாயுவில் இருந்து விடுபடலாம்.

முழுமையாக படித்ததற்கு நன்றி

வயிற்றில் அதிகப்படியாக வாயு சேரவிடாமல் தடுக்க இந்த முறையை பின்பற்றலாம். உடல்நலம் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு OnlyMyHealth உடன் இணைந்திருங்கள்.