நம் உடலில் கொலஸ்ட்ராலைக் குறைக்க சில வழிகள் உள்ளன. இப்போது கொலஸ்ட்ராலைக் குறைக்கும் வழிகள் என்னவென்று இங்கே காண்போம்.
உணவுப் பழக்க வழக்கங்கள்
இதய ஆரோக்கியத்திற்கு உணவு முறையை சரியாகக் கடைபிடிப்பது முக்கியமாகும். குறிப்பாக, நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகளின் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்க முடியும். எனவே, ஆரோக்கியமான எடையுடன் இருக்க போதுமான கலோரிகள் சாப்பிடுவதும் குடிப்பதும் பரிந்துரைக்கப்படுகிறது.
கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மருந்துகள்
சில வாழ்க்கை முறை மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் மட்டுமே கொலஸ்ட்ரால் அளவை சரியாக வைத்திருக்க முடியும். கூடுதலாக, இதற்கு மருந்துகள் தேவைப்படலாம். கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் மருந்துகள் பல்வேறு வடிவங்களில் கிடைக்கிறது.
புகைப்பிடித்தலைத் தவிர்த்தல்
புகைப்பிடித்தலைத் தவிர்ப்பதன் மூலம் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அல்லது HDL கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கலாம். இவ்வாறு ஹெச்டிஎல் அதிகமாக இருப்பது, எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். ஏனெனில், எச்டிஎல் தமனிகளில் உள்ள கெட்ட கொழுப்பான எல்டிஎல் கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.
உடற்பயிற்சி
வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபடுவது பல்வேறு விதமான பிரச்சனைகளை ஏற்படுத்தாமல் பாதுகாக்கிறது. அதில் ஒன்றாக இதயத்தில் ஏற்படும் பிரச்சனையும் அடங்கும். எனவே, வாரத்திற்கு மூன்று நாள்கள் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்.
மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல்
நீண்ட கால மற்றும் அதிக அளவிலான மன அழுத்தம் உடலில் கெட்ட கொழுப்பை அதிகரித்து, நல்ல கொழுப்பின் அளவை குறைக்கிறது. எனவே, மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் உடலில் கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கலம்.
எடை மேலாண்மை
உடல் எடையைச் சரியாகக் கவனிப்பதன் மூலம், உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். வளர்ச்சிதை மாற்ற நோய்க்குறி உள்ளவர்களுக்கு, இது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.