சிறுநீர் பாதை நோய்த்தொற்று ஒரு வகையான பாக்டீரியா தொற்று ஆகும். இது சிறுநீர்ப்பை, சிறுநீரகங்கள், சிறுநீர்க்குழாய்கள் போன்ற சிறுநீர் அமைப்பின் பல்வேறு பகுதிகளை பாதிக்கலாம். குறிப்பாக, இது பெண்களிடையே பொதுவானதாகக் கருதப்படுகிறது
அறிகுறிகள்
சிறுநீர் பாதை நோய்த்தொற்றின் அறிகுறியாக அடிக்கடி சிறுநீர் கழித்தல், பிறப்புறுப்பு வலி, வயிற்று வலி, சிறுநீர் கழிக்கும் போது வலி மற்றும் துர்நாற்றம் போன்றவை ஏற்படலாம். எனினும், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மூலம் UTI களை திறம்பட குணப்படுத்தலாம். இதை இயற்கையாகவே தடுக்க உதவும் குறிப்புகளைக் காணலாம்
நீரேற்றமாக இருப்பது
போதுமான நீரேற்றத்துடன் இருப்பது சிறுநீர் அமைப்பிலிருந்து பாக்டீரியாவை வெளியேற்ற உதவுகிறது. இது சிறுநீர் பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், நோய்த்தொற்றுக்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது
கிரான்பெர்ரி சாறு
இது ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்ததாகும். இது யுடிஐ அபாயத்தைத் தடுக்க உதவுகிறது. மேலும் இந்த UTI-க்குக் காரணமான பாக்டீரியாவின் மிகவும் பொதுவான வகை ஈ.கோலையின் வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது
புரோபயாடிக் நிறைந்த உணவுகள்
புரோபயாடிக்குகளில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் சீரான யோனி மற்றும் குடல் நுண்ணுயிரியை பராமரிக்க உதவுகிறது. எனவே புரோபயாடிக் நிறைந்த சப்ளிமெண்ட்ஸ், தயிர் போன்ற புளித்த உணவுகளை உட்கொள்வது UTI ஆபத்தை குறைக்க உதவுகிறது
அடிக்கடி சிறுநீர் கழிப்பது
சிறுநீர் கழிப்பதை ஒருபோதும் நிறுத்த கூடாது. ஏனெனில், இது தொற்றுநோயை அதிகரிக்கலாம். எனவே சிறுநீர்ப்பையை காலி செய்ய வேண்டும். இது பாக்டீரியா உருவாவதைத் தடுக்க உதவுகிறது
சுகாதார பராமரிப்பு
கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு எப்போதும் அந்த பகுதியைத் துடைக்க வேண்டும். மேலும், மாதவிடாயின் போது பாக்டீரியாக்கள் உருவாகாமல் இருக்க அவ்வப்போது பேட்களை மாற்ற வேண்டும்