மலேரியாவைத் தடுக்க நீங்க பின்பற்ற வேண்டியவை

By Gowthami Subramani
25 Apr 2024, 11:50 IST

கொசுக்கள் மூலமாக ஏற்படும் நோயான மலேரியாவால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். இதை ஆரம்பத்திலேயே சிறந்த யுக்திகளைக் கையாண்டு தடுக்கலாம்

கொசுவலை பயன்பாடு

கொசுக்கள் மற்றும் பூச்சிகளிடமிருந்து பாதிப்படையாமல் இருக்க கொசு வலையின் கீழ் உறங்குதல் சிறந்த தேர்வாகும். இதில் கொசுக்கடியைத் தவிர்ப்பதன் மூலம் மலேரியா நோயைத் தவிர்க்கலாம்

உடலை மூடி வைப்பது

சருமம் நேரடியாக வெளிப்படும் போது கொசுக்கள் கடிக்க அதிக வாய்ப்புண்டு. எனவே கொசுக்கடியைத் தவிர்க்க முடிந்த வரை முழு கை மற்றும் நீண்ட பேன்ட் அணியலாம்

ஸ்ப்ரேக்கள் பயன்பாடு

சந்தையில் கிடைக்கும் கொசு விரட்டி ஸ்ப்ரேக்கள் மற்றும் வேப்பரைசர்களைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் மலேரியாவைத் தடுக்கலாம்

எண்ணெய் பயன்பாடு

சிட்ரொனெல்லா எண்ணெய் என்பது எலுமிச்சையிலிருந்து பெறப்படுகிறது. இதை ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெயுடன் கலந்து உடலில் பயன்படுத்தும் போது கொசுக்களைத் தடுக்க முடியும். ஒரு சில துளிகள் மட்டுமே பயன்படுத்தலாம்

கிரீம், லோஷன் பயன்பாடு

துணியால் மூடப்படாத கை, கால் பகுதிகளில் கொசு விரட்டி கிரீம்கள், லோஷன்களைப் பயன்படுத்தலாம். சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது கொசு விரட்டி கிரீமை அப்ளை செய்யலாம்

இந்த வழிமுறைகளின் மூலம் மலேரியாவைத் தடுக்கலாம். எனினும், சாத்தியமான அறிகுறிகளைக் கண்காணித்தால் உடனடியாக மருத்துவரை அணுகி பலன் பெறுவது நல்லது