என்னா வெயிலு.! ஹீட் ஸ்ட்ரோக் வந்துருமோ.? தப்பிக்க சூப்பர் டிப்ஸ்...

By Ishvarya Gurumurthy G
26 Apr 2024, 15:30 IST

அடிக்கும் வெயிலில் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் இருந்து தப்பிக்க சில வழிகள் உதவலாம். அது என்னவென்று இங்கே காண்போம்.

கோடை வெயில் தொடங்கிவிட்டது. அடிக்கும் வெயிலில் வெளியே செல்வதற்கு பயமாக இருக்கிறது. இதனால் ஹீட் ஸ்ட்ரோக் வரும் அபாயம் ஏற்படுகிறது.

ஹீட் ஸ்ட்ரோக் என்றால் என்ன?

அதிக வெப்ப நிலையில் வெளிப்படுவது, ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட காரணமாக திகழ்கிறது. இது தலைவலி, அதிகமான இதயத் துடிப்பு மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்படும். இது உங்கள் மூளை மற்றும் இதயத்தை சேதப்படுத்தும். இதில் இருந்து விடுபட சில டிப்ஸ் இங்கே.

நீரேற்றமாக இருங்கள்

ஆரோக்கியமான உடல் வெப்பநிலையை பராமரிக்க நீரேற்றமாக இருப்பது அவசியம். இதற்கு இளநீர் குடிக்கலாம். மேலும் உப்பு மற்றும் சர்க்கரை கலந்த நீரை எப்போதும் கையில் வைத்துக்கொள்ளவும். இது உங்களை நீரேற்றமாக வைத்திருக்கும்.

ஏசி வேண்டாம்

வீடு மற்றும் ஆஃபிஸில் எப்போதும் ஏசியில் இருந்து பழகினால், வெயிலை சமாளிப்பது கடினமாகிவிடும். ஆகையால் அதிக நேரம் ஏசியில் செலவிடுவதை தவிர்க்கவும்.

எடையை குறைக்கவும்

எடை அதிகமாக இருப்பவர்களை தொடர்பான நோய்களுக்கு அதிக ஆபத்தில் உள்ளனர். எடை அதிகமாக இருந்தால் உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் திறன் பாதிக்கும். ஆகையால் எடையை நிர்வகிக்க வேண்டும்.

பொருத்தமான ஆடை

கோடையில் முடிந்த வரை தளர்வான ஆடைகளை அணியுங்கள். வெயிலில் செல்லும்போது இருக்கமான ஆடையை அணிந்தால், மயக்கத்தை ஏற்படுத்தும். மேலும் இது நிரிழப்புக்கு வழிவகுக்கும். தளர்வான ஆடையை அணிவதால், ஹீட் ஸ்ட்ரோக்கில் இருந்து விடுபடலாம்.

வெப்பநிலையை சரிபார்க்கவும்

நீங்கள் வெளியே செல்லும்போதும் சரி, வீட்டில் இருக்கும்போதும் சரி, அவ்வப்போது வெப்பநிலையை சரிபார்த்துக்கொள்ளவும். இது உங்களை காக்க உதவும். வெப்பநிலை அதிகமாக காட்டும்போது, வெளியே செல்ல வேண்டாம். இவ்வாறு செய்வதன் மூலம் ஹீட் ஸ்ட்ரோக்கில் இருந்து விடுபடலாம்.