கொசுக்களால் பரவக்கூடிய மலேரியா நோய் மிகவும் ஆபத்தானது. இதை தடுக்கும் முறை குறித்து நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.
இன்று உலக மலேரியா தினத்தை முன்னிட்டு, நோய் தடுப்பு முறை குறித்து தெரிந்துக்கொள்வோம். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியவை என்னவென்று இங்கே காண்போம்.
சுத்தம்
வீட்டில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும். அவ்வப்போது இருக்கும் இடத்தை சுத்தம் செய்யவும். கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யாமல் தடுக்க, ஆங்காங்கே தேங்கி நிற்க்கும் தண்ணீரை அகற்றவும்.
முழு ஆடைகள்
கொசுக்கள் மாலை நேரங்களில் அதிகம் இருக்கும். அந்த நேரத்தில் உங்களை முழுமையக மறைக்கும் விதத்தில் ஆடை அணிந்துக்கொள்ளவும்.
விழிப்புணர்வை ஏற்படுத்தவும்
சமூகம் சார்ந்த கொசு ஒழிப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி, மலேரியா மற்றும் டெங்கு ஆகிய இரண்டின் பரவலைக் குறைக்க உதவும் தடுப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும்.
கதவை மூடவும்
உங்கள் வீட்டிற்குள் கொசுக்கள் நுழைவதைத் தடுக்க உங்கள் ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் திரைகளைப் பயன்படுத்தவும். மாலை நேரத்தில் கதவுகளை அடைக்கவும்.
பரிசோதனை
குமட்டல், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை மலேரியாவிற்கான அறிகுறிகளாகும். இவற்றில் ஏதேனும் ஒன்றை சந்தித்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும். மேலும் அவ்வப்போது முழு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும்.
கொசு விரட்டி
கொசுவர்த்தி சுருள், கொசு பேட், கொசுவை விரட்டும் கிரீம் போன்றவற்றை பயன்படுத்தவும். இதன் மூலம் கொசு கடியில் இருந்து விடுபடலாம்.
வெளியே செல்ல வேண்டாம்
மாலை நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்கவும். இதன் மூலம் கொசுக்களால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கலாம்.