பெரும்பாலானோர் பாடல்களைக் கேட்க மற்றும் போன் பேச இயர்பட், இயர்போன், ப்ளூடூத் போன்றவை பயன்படுத்துகின்றனர். இவை காதுகளுக்கு ஆரோக்கியமானவை அல்ல.
பலர் காது குடைவதற்கு ஊசிகள் போன்ற சில உலோகப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். இது காதுகுழலில் காயத்தை ஏற்படுத்தக் கூடும்.
உங்கள் காது வறண்டு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், காதில் தண்ணீர் அல்லது மற்ற திரவங்களை ஊற்ற வேண்டாம். காதுகள் அடைப்புக்கு வழிவகுக்கும்.
உங்கள் காதுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க நீங்கள் செய்ய வேண்டிய மற்றொரு விஷயம், உரத்த சத்தங்களைத் தவிர்ப்பது.
சத்தம் கேட்பது உங்கள் தொழிலின் ஒரு பகுதியாக இருந்தால், சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
காதுகளின் நிலையைப் பரிசோதிக்க ஆண்டுக்கு ஒரு முறையாவது ENT அறுவை சிகிச்சை நிபுணரை அணுகுவது நல்லது.