அதிகமா சாப்பிட்டு வயிறு உப்புசமா இருக்கா? அதைத் தடுக்க இத செய்யுங்க.

By Gowthami Subramani
20 Dec 2023, 20:49 IST

வயிறு வீக்கம்

பொதுவாக வீக்கம் என்பது வாயு காரணமாக நிரம்பிய மற்றும் இறுக்கமான உணர்வைக் குறிக்கிறது. இந்த அசௌகரியத்தைத் தரும் வீக்கத்தைத் தவிர்க்க சில முறைகளைக் கையாள்வதும், சில பானங்களை அருந்துவதும் அவசியமாகும்

கனமான உணவுகளைத் தவிர்ப்பது

பெரிய, கனமான உணவுகள் உண்பதைத் தவிர்க்க வேண்டும். மாற்றாக, சிறிய அளவிலான உணவுகள், அவ்வப்போது பழங்கள் போன்றவற்றை உட்கொள்ளலாம்

கார்பனேற்றப்பட்ட பானங்கள்

அதிக உணவுக்குப் பின், கார்பனேற்றப்பட்ட பானங்களை உட்கொள்வது வயிற்றில் அமில உற்பத்தியை அதிகரிக்கும். இது வீக்கத்திற்கு வழிவகுக்கலாம். எனவே இவற்றைத் தவிர்ப்பது நல்லது

சரியாக மெல்லுதல்

உணவை சரியாக மென்று சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவுகிறது. ஆனால், வேகமாக உண்பது, வயிற்று உப்புசத்திற்கு வழிவகுக்கும். எனவே, உணவை சரியாக மென்று சாப்பிட வேண்டும்

இஞ்சி டீ

உணவுக்குப் பிறகு இஞ்சி டீயை உட்கொள்வது வயிறு வீக்கத்திற்கான அறிகுறிகளைக் குறைக்க உதவும். மேலும், இது செரிமான செயல்முறையை எளிதாக்க உதவுகிறது

வழக்கமான உடற்பயிற்சி

வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது செரிமான மண்டலத்தில் வாயுவின் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. இது வீக்கத்திற்கான அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கிறது