சண்டைக்குப் பிறகு கோபமாக இருக்கும் உங்கள் துணையை, இனி எளிதாகச் சமாதானம் செய்யலாம். இதற்காக நீங்கள் செய்ய வேண்டிவை இது தான்.
மன்னிப்பு கேளுங்கள்
நீங்கள் செய்த தவறால் உங்கள் துணை கோபமடைந்திருந்தால் தயங்காமல் மன்னிப்பு கேளுங்கள். மன்னிப்பு கேட்பது உங்கள் தவறை நீங்கள் உணர்ந்ததாக மற்றவருக்கு உணர வைக்கும். அதனால், நீங்கள் மன்னிப்பு கேட்டால் கட்டாயமாக உங்கள் துணையின் கோபம் தணிந்து, அவர் உங்களை மன்னித்து விடுவார்.
சர்ப்ரைஸ் செய்யவும்
உங்களிடம் கோபமாக இருக்கும் உங்கள் துணைக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்து சமாதானம் செய்யலாம். அவருக்கு விருப்பமான அல்லது தேவையான எந்தப் பொருளையும் பரிசளிக்கலாம். இதனுடன் உங்கள் அன்பை வெளிப்படுத்தும் வகையில் ஒரு ரோஜா பூவையும் கொடுக்கலாம்.
கிரீட்டிங் கார்ட்ஸ்
உங்கள் துணையிடம் நேரடியாக உங்கள் மனதில் உள்ள விஷயங்களை வெளிப்படுத்தச் சங்கடமாக இருந்தால், நீங்கள் அவருக்கு ஒரு அழகான கிரீட்டிங் கார்ட்ஸ் கொடுக்கலாம். உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தி, நீங்கள் அவரை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதையும் அட்டையில் எழுதிக் கொடுக்கலாம்.
பிடித்த உணவைச் சமைக்கவும்
வயிற்றின் வழியே இதயத்திற்கு செல்லும் வழி என்ற பழமொழியை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். உங்கள் துணையை சமாதானம் செய்ய, நீங்கள் அவருக்குப் பிடித்த மிகவும் விருப்பமான உணவுகளைச் சமைக்கலாம்.
வெளிப்படையாகப் பேசுங்கள்
கோபமாக இருக்கும் உங்கள் துணையிடம் வெளிப்படையாகப் பேசுங்கள். உங்களிடம் அவர் எதிர்பார்க்கும் விஷயங்களைப் பற்றியும், பிற்காலத்தில் இருவருக்கிடையே சண்டைகள் வராமல் தடுப்பதற்கு என்ன செய்யலாம் என்பதை பற்றியும் விவாதிக்கவும்.