ரூட் கெனால் சிகிச்சைக்குப் பின் எந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.
இதை சாப்பிடாதீர்கள்
ரூட் கெனாலுக்கு பிறகு, உலர் பழங்கள், கடினமான பொருட்கள், புளிப்பான பழங்கள், பிஸ்கட் மற்றும் பாக்கு போன்றவற்றை சாப்பிட வேண்டாம்.
வாய் வழி சுகாதாரம்
பல் சுகாதாரம் மற்றும் வாய்வழி ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வாயில் பாக்டீரியா பரவலை தடுக்க, சாப்பிட்ட பின் வாய் கொப்பளிக்க மறவாதீர்கள்.
மருத்துவரை அணுகவும்
வலி, சீழ் வடிதல் அல்லது வேறு ஏதேனும் அசாதாரண அறிகுறிகளைக் கண்டால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும்.
பல்லிடுக்கு நூல்
பற்களில் சிக்கிய உணவு, வீக்கம் அல்லது வலியை ஏற்படுத்தும், எனவே இதை நீக்கப் பல்லிடுக்கு நூலை பயன்படுத்தலாம்.
அடிக்கடி தொடாதீர்கள்
சிகிச்சைக்குப் பின், பல்லை அடிக்கடி தொடுவதைத் தவிர்க்கவும். இது மிகுந்த வலியை ஏற்படுத்தும்.