மனித உடல் உறுப்புகளில் முக்கிய பங்கு வகிப்பது கல்லீரல். கல்லீரல் பாதிப்பால், உடலில் பல்வேறு விதமான நோய்கள் ஏற்படலாம். இதனை பாதுகாப்பதற்கான வழிகள் இங்கே.
உடல் எடை
உடல் எடை அதிகமாக இருந்தால் கல்லீரல் நோய் உண்டாவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். இதனால் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.
உணவு முறைகள்
பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட உடலுக்கு நன்மை தரக்கூடியவற்றை உண்பதன் மூலம் கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகளில் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
வைட்டமின் சி
கல்லீரைச் சுத்தப்படுத்துவதில், வைட்டமின் சி சார்ந்த உணவுகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இது கல்லீரலை வலிமையாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
உடற்பயிற்சி
உடற்பயிற்சி செய்யும் போது உடலில் உள்ள கொழுப்புகள் கரைக்கப்படுகிறது. எனவே, தொடர்ச்சியான உடற்பயிற்சியானது கல்லீரல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுவதைத் தடுக்க உதவும்.