உடலில் ஹீமோகுளோபின் குறைவதற்கு இரும்புச்சத்து குறைபாடுதான் காரணம். ஹீமோகுளோபினை அதிகரிக்க என்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்று இங்கே காண்போம்.
பேரிச்சம்பழமும் உலர் திராட்சையும்
இந்த உலர் பழங்களில் மெக்னீசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி, ஏ மற்றும் தாமிரம் நிறைந்துள்ளது. இது உங்கள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.
தர்பூசணி
நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி, உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை வழங்குகிறது. இதனால் ஹீமோகுளோபின் அதிகரிக்கிறது.
கீரை
கீரை வகையில் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் பசலைக் கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
முருங்கை இலை
இதில் இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இது உங்கள் இது உங்கள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.
மாதுளை
வைட்டமின் சி நிறைந்த மாதுளையில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.
ஆப்பிள்
வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்த ஆப்பிளை தினமும் உங்கள் உணவில் இணைத்துக்கொள்ளுங்கள். இது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.
பீட்ரூட்
பீட்ரூட்டில் மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, பி1, பி2, பி6, பி12 மற்றும் இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்தும்.