கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க நீங்க செய்ய வேண்டியவை

By Gowthami Subramani
29 Jul 2024, 13:30 IST

இன்று பலரும் சந்திக்கும் பொதுவாக பிரச்சனைகளில் கல்லீரல் பிரச்சனையும் ஒன்று. இதற்கு ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் மோசமான வாழ்க்கை முறையே காரணமாகும். கல்லீரல் ஆரோக்கியத்திற்கு தினமும் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்

ஆரோக்கியமான உணவு

பழங்கள், காய்கறிகள், தானியங்கள், இறைச்சி, பீன்ஸ், பால் மற்றும் எண்ணெய் போன்ற சீரான உணவு உட்கொள்ளலின் மூலம் கல்லீரலைப் பாதுகாக்கலாம். மேலும், நார்ச்சத்து நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுப்பது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது

நிறைய தண்ணீர் குடிப்பது

நீரேற்றமாக வைப்பதன் மூலம் பல்வேறு உடல்நல பிரச்சனைகளிலிருந்து விடுபட முடியும். அவ்வாறே உடலை நீரேற்றமாக வைப்பது கல்லீரலை சிறப்பாக செயல்பட உதவுகிறது. மேலும் நீரிழப்பு ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது

உடற்பயிற்சி செய்வது

வழக்கமான உடற்பயிற்சியின் மூலம் ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கலாம். இவை கல்லீரலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைப்பதுடன், கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது

போதுமான தூக்கம்

மோசமான தூக்கத்தின் தரம் அல்லது போதுமான தூக்கம் இல்லாமை போன்றவை சர்க்காடியன் தாளத்தை சீர்குலைத்து வீக்கத்தை அதிகரிக்கலாம். இது கல்லீரல் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும் அபாயத்தை உண்டாக்குகிறது

மது கட்டுப்பாடு

அதிகப்படியான மது அருந்துதல் கல்லீரல் பாதிப்புக்கு முக்கிய காரணமாக அமைகிறது. எனவே கல்லீரல் ஆரோக்கியத்திற்கு அதிகளவு மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்

நச்சுக்களைத் தவிர்ப்பது

ஏரோசோல்கள் அல்லது நச்சுப் பொருட்களைப் பயன்படுத்தும் போது முகமூடி அணிவதை உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் வெளிப்படுவதைக் குறைக்கலாம்