பற்கள் மஞ்சள் நிறமாக மாற காரணம் என்ன தெரியுமா?

By Karthick M
22 Dec 2023, 02:33 IST

பற்கள் மஞ்சள் கறை நீங்க டிப்ஸ்

பற்களின் மஞ்சள் நிற பிரச்சனை என்பது முகத்தின் மொத்த அழகையும் கெடுக்கும். குறிப்பிட்ட வைட்டமின் குறைபாட்டால் இந்த பிரச்சனை ஏற்படலாம்.

எந்த வைட்டமின் குறைபாடு காரணம்

பல் பிரச்சனைகளுக்கான காரணங்களில் ஒன்று உடலில் உள்ள வைட்டமின் டி குறைபாடு ஆகும். ஆரோக்கியமான மற்றும் வலுவான பற்களுக்கு வைட்டமின் டி நிறைய இருப்பது மிக முக்கியம்.

சோயா மில்க்

வைட்டமின் டி குறைபாட்டை போக்க சோயா பால் சாப்பிடலாம். இதில் வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது.

காலை சூரிய ஒளி

தினமும் அதிகாலையில் எழுந்து காலை சூரிய ஒளியை எடுத்துக் கொள்வது மிக முக்கியம். இதன்மூலம் வைட்டமின் டி நிறைய கிடைக்கும்.

முட்டைகள்

வைட்டமின் டி நிறைந்த முட்டைகளை உட்கொள்வது பல் பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது. இது எலும்புகளையும் பலப்படுத்தும்.

தயிர்

தயிரில் வைட்டமின் ஏ, டி உடன் புரதம் மற்றும் கால்சியம் ஏராளமாக உள்ளது. இது பற்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை நீக்கும்.

பாதாம் பால்

தினமும் இரவில் தூங்கும் முன் பாதாம் பால் குடிக்கவும். இதில் உள்ள வைட்டமின் டி மற்றும் கால்சியம் பண்புகள் பற்களை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்கும். இது பற்களின் மஞ்சள் நிறத்தை நீக்கும்.

முழுமையாக படித்ததற்கு நன்றி

உடலில் வைட்டமின் டி குறைவதால் பற்கள் மஞ்சள் நிறமாக மாறும். எனவே உடலுக்கு வைட்டமின் டி மிக முக்கியம்.