வெயிலில் தொண்டை வலியை போக்குவது எப்படி?

By Karthick M
31 May 2024, 16:43 IST

தொண்டை வலி

வெயிலிலும் பெரும்பாலானோர் தொண்டை வலியால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த பிரச்சனையை எதிர்கொண்டால் சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றலாம்.

தொண்டை புண் ஏற்பட காரணம்

தொண்டை வலிக்கு பொதுவான காரணம் வைரஸ்கள். தொண்டை புண் ஸ்ட்ரெப்டோகாக்க் பியோஜின்ஸ் பாக்டீரியாவால் ஏற்படலாம். இதை சரிசெய்வது எப்படி என பார்க்கலாம்.

ஏசி பயன்பாடு

வெயிலில் வெளியே சுற்றி வந்ததும் ஏசி அறையில் அமருவதை தவிர்க்கவும். இது வெப்பத்தில் இருந்து உடலை உடனடியாக குளிர்விக்கும். இதன் காரணமாக தொண்டை புண் ஏற்படலாம்.

உடனடி குளியல்

வெயிலில் வெளியே சென்று வந்ததும் பலர் உடனடியாக குளிக்க ஆரம்பிப்பார்கள். இது உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். விரும்பினால் வெளியே சென்று வந்து அரை மணி நேரத்திற்கு பின் குளிக்கலாம்.

ஆற்றல் பானங்கள் மற்றும் குளிர் பானம்

வெயிலில் நிவாரணம் அளிக்கும் என பலர் ஆற்றல் பானங்களையும் குளிர் பானங்களையும் குடிப்பார்கள். அதிக குளிர்ந்த ஆகாரம் தொண்டை புண் பிரச்சனையை ஏற்படுத்தும்.

தண்ணீர் குடிக்கவும்

கோடையில் தொண்டை புண் சில நேரங்களில் உடலில் தண்ணீர் பற்றாக்குறையை ஏற்படுத்தும். உடலை நீரேற்றமாக வைக்க போதுமான நீர் குடிக்க வேண்டும்.