வீட்டிலேயே இதய ஆரோக்கியத்தை சரிபார்க்க உதவும் எளிய சோதனைகளைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
படிக்கட்டுகள் சோதனை
உங்கள் இதயம் ஆரோக்கியமாக உள்ளதா இல்லையா என்பதை படிக்கட்டுகளில் ஏறிச் சென்று பார்க்கலாம். ஒருவரால் 45 வினாடிகளில் வழக்கமான நான்கு மாடிகளை ஏற முடிந்தால், அவரது இதயம் ஆரோக்கியமாக இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம். 60 படிகளை ஏறுவதற்கு 90 வினாடிகளுக்கு மேல் எடுத்துக் கொண்டால், நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
இதயத் துடிப்பை சரிபார்த்தல்
நம் இதய ஆரோக்கியத்தை கண்டறிவதற்கு ஒரு முக்கிய நிலை காட்டியாக இதயத்துடிப்பு திகழ்கிறது. எந்தக் கருவிகளும் இல்லாமல் வீட்டிலேயே உங்கள் இதயத் துடிப்பை எளிதாகச் சரிபார்க்கலாம். ஆனாலும் இயற்கையாகவே, நீங்கள் செய்யும் உடல் செயல்பாடுகள் அல்லது உடலை எவ்வளவு வருத்திக் கொள்கிறீர்கள் என்பதை பொறுத்து உங்களின் இதயத்துடிப்பு மாறுபடும்.
ஓய்வில் இருக்கும்போது இதயத் துடிப்பு பரிசோதனை
பொதுவாகப் பெரியவர்களின் தூக்கம் அல்லது ஓய்வின்போது, ஒரு நிமிடத்திற்கு 60 முதல் 100 வரை இதயம் துடிக்கிறது. உங்கள் இதயத் துடிப்பு இதைவிடக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால், உங்கள் மருத்துவரை அணுகவும். ஓய்வின்போது குறைந்த இதயத் துடிப்பு இருப்பது குறைந்த உடல் தகுதி, உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு ஆபத்து மற்றும் இறப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அதிகபட்ச இதய துடிப்பு பரிசோதனை
உடற்பயிற்சி அல்லது பிற உடல் செயல்பாடு மற்றும் விளையாட்டுகளின்போது இதயத் துடிப்பு அதிகரிப்பது இயல்பானதே. ஆனால் இதயத் துடிப்பு அதிகரிப்பதால் உடல் செயல்பாடுகளைச் செய்வதில் சிரமம் ஏற்பட்டாலோ அல்லது உங்களுக்குச் சிரமமாக இருந்தாலோ, மருத்துவரை அணுகி இதயப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இதய நோயின் அறிகுறிகளை அங்கீகரிக்கவும்
மார்பு வலி, இறுக்கம், மூச்சுத் திணறல், மூட்டுகள், கணுக்கால் அல்லது பாதங்களின் வீக்கம், மேல் முதுகு அல்லது முதுகு வலி, சீரற்ற இதயத் துடிப்பு, இதயத் துடிப்பில் மாற்றம், பலவீனம், தலைசுற்றல், கைக்கால்களில் உணர்வின்மை, உடல் செயல்பாடுகளின்போது சோர்வு மற்றும் பலவீனம் போன்ற பிரச்சனைகள், நெஞ்செரிச்சல், குமட்டல், வாந்தி மற்றும் மயக்கம் போன்றவை மோசமான இதய ஆரோக்கியத்தின் அறிகுறியாக இருக்கலாம்.