புகையிலை மற்றும் சிகரெட் பழக்கம் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது, புகைபிடிப்பவர்களின் ஆரோக்கியத்தை மட்டும் பாதிக்காது, அவர்களை சுற்றி வாழும் மக்களையும் பாதிக்கிறது. புகையிலை மற்றும் புகைபிடித்தல் ஆகியவை உங்கள் ஆரோக்கியத்தில் என்ன விளைவை ஏற்படுத்தும் என பார்க்கலாம்.
இதய பிரச்சினை
புகைபிடித்தல் பழக்கம் மாரடைப்பு, இதய செயலிழப்பு மற்றும் இதயம் தொடர்பான பிற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.
ஆஸ்துமா
புகைபிடிப்பவர்கள் அல்லது சிகரெட் புகைப்பவர்கள் ஆஸ்துமாவை எளிதில் பெறுகிறார்கள். இதனால், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.
மூளை பாதிப்பு
மூளைக்குள் நுழையும் நச்சுப் பொருளான நிகோடின் மனநலத்தில் மோசமான விளைவு. இதனால், நியாபக மருதி, யோசிப்பதில்லை சிரமம் என பல பிரச்சினைகள் ஏற்படும்.
புற்றுநோய் அபாயம்
நுரையீரல் மற்றும் வாய் புற்றுநோயின் ஆபத்து அதிகரிக்கிறது. அது மட்டும் அல்ல, புகைபிடிப்பதால் நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த பிரச்சினைகளையும் ஏற்படும்.
பக்கவாதம்
புகையிலை நுகர்வு காரணமாக பக்கவாதம் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது. புகைபிடித்தல் டிமென்ஷியா அல்லது அல்சைமர் போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.