கழிப்பறைக்கு செல்வது உடல் நச்சுக்களை வெளியேற்ற உதவும். ஒரு நாளைக்கு எத்தனை முறை கழிப்பறைக்கு செல்வது இயற்கை என்பது குறித்து பார்க்கலாம்.
தினசரி எத்தை முறை கழிப்பறைக்கு செல்லலாம்?
தினசரி 4 முதல் 6 முறை அல்லது அதிகப்பட்சம் 10 முறை கூட கழிப்பறைக்கு செல்லலாம். இது உடல் வெப்பநிலை, சிறுநீர்ப்பை அளவு, வயது மற்றும் உணவுப் பழக்கத்தை பொறுத்தது. கழிப்பறைக்கு அடிக்கடி செல்வதால் ஏற்படும் பிரச்சனைகளை அறிந்துக் கொள்வோம்.
சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை
சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை அல்லது போதுமான இரத்தம் கிடைக்கவில்லை என்றாலும் குறைவாகவே சிறுநீர் வெளியேறும். சிறுநீரக செல்களுக்கு சரியான இரத்தம் கிடைக்காத போது இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
சிறுநீர் பாதை பிரச்சனைகள்
சிறுநீர் பாதை பிரச்சனைகளை எதிர்கொண்டால் கழிப்பறை அணுகல் குறைவாக இருக்கலாம். இதனால் சிறுநீர் செல்லும் பாதையில் தடைகள் ஏற்படுத்தும்.
தண்ணீர் பற்றாக்குறை
உங்கள் உடலில் நீர் பற்றாக்குறை இருந்தாலும் கழிப்பறைக்கு செல்வதில் சிக்கல் ஏற்படும். இதனால் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி, போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
யாருக்கு அதிக பிரச்சனைகள்?
குறைவாக சிறுநீர் வெளியேறுவதால் நீரிழிவு, இதயம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும். இரத்தத் தொற்று, கல்லீரல் பிரச்சனை, குறைந்த இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படும்.
பாதுகாப்பது எப்படி?
அடிக்கடி கழிப்பறைக்கு செல்வதில் சிக்கலை எதிர்கொண்டால் உங்கள் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையை சரிசெய்யவும். அதேபோல் போதைப் பொருட்களில் இருந்து விலகி இருங்கள்.