ஆஞ்சியோபிளாஸ்டி, ஸ்டென்ட் பொறுத்திய பின் சரியாக எவ்வளவு காலம் ஆகும்?

By Karthick M
26 May 2025, 19:14 IST

இதய பாதிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு செய்யப்படும் ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்ட் பொருத்துதலின் மீட்பு நேரம் நிலைமையைப் பொறுத்தது.

ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்ட் வைத்த பிறகு குணமடைய ஒரு வாரம் அல்லது இன்னும் சில நாட்கள் ஆகலாம்.

மாரடைப்பிற்குப் பின் ஆஞ்சியோபிளாஸ்டி செய்துகொண்டால், நோயாளி முழுமையாக குணமடைந்து வேலைக்குத் திரும்ப பல வாரங்கள் அல்லது மாதங்கள் கூட ஆகலாம்.

ஆஞ்சியோபிளாஸ்டி, ஸ்டென்ட் வைத்த பிறகு 1 முதல் 2 வாரங்களுக்குள் லேசான உடல் செயல்பாடுகளைத் தொடங்க மருத்துவர்கள் நோயாளிக்கு அறிவுறுத்துகிறார்கள்.

பெரும்பாலான நோயாளிகள் 4 முதல் 6 வாரங்களுக்குள் முழுமையாக குணமடைந்ததாக உணர்கிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்க ஒன்று.