அதிக நேரம் உட்கார்ந்தே இருந்தால் என்ன பாதிப்பு வரும்?

By Karthick M
22 Dec 2023, 01:19 IST

உட்கார்ந்த இடத்தில் வேலை செய்வது நல்லதா?

பலரும் உட்கார்ந்த இடத்திலேயே 8-9 மணி நேரம் வரை வேலை செய்கிறார்கள். வேலை நிலை அப்படி அமர்ந்த நிலையில் செய்யும்படியாக அமைந்தாலும் இது வாழ்க்கை முறைக்கு சரியாக இல்லை.

உட்கார்ந்த இடத்தில் வேலை நல்லதா?

நீண்ட நேரம் உட்கார்ந்த இடத்தில் வேலை செய்வது உடல் பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

உடல் பருமன்

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது பல பிர்சசனைகளை ஏற்படுத்தும். உடல் பருமன் முதல் மனநல பிரச்சனைகள் என பல நிலையை சந்திக்க வைக்கும். உடலில் உள்ள கொழுப்புகள், சர்க்கரை எளிதில் ஜீரணமாகாது.

கழுத்து வலி

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் தோள்பட்டை மற்றும் கழுத்தில் வலி ஏற்படுகிறது. இது மோசமான வலியை உண்டாக்கும்.

மன அழுத்தம்

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது மனச்சோர்வு மற்றும் பதட்டப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே நீங்கள் யோகா மற்றும் தியானம் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

இரத்த ஓட்டம்

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது ஒருவரின் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். உடல் செயல்பாடு இல்லாததால் இரத்த ஓட்டம் குறைகிறது. இது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது.

கால் பிரச்சனைகள்

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது உங்கள் கால் தசைகளை பலவீனப்படுத்தும். இது உங்கள் கால்களில் மட்டுமல்ல உடலில் பலவீனத்தை ஏற்படுத்தும்.

இதய ஆரோக்கியம்

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது இதயம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். எனவே அதிக நேரம் உட்காருவதை தவிர்ப்பது நல்லது.