புகையிலையைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றும்போது, இதமட்டும் பண்ணுங்க. புகையிலை எண்ணமே தோன்றாது.
நிகோடின் மாற்று சிகிச்சை
நிகோடின் கம், லோசன்ஜ்கள், நாசி ஸ்ப்ரேக்கள் அல்லது இன்ஹேலர்கள் போன்ற நிகோடின் மாற்று சிகிச்சைகள், புகையிலை பழக்கத்தை நிறுத்த உங்களுக்கு உதவலாம்.
தூண்டுதல்களைத் தவிர்க்கவும்
பார்ட்டிகள் அல்லது பார்கள் போன்ற இடங்களில் நீங்கள் அடிக்கடி புகைபிடிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கலாம். சில காபி குடித்த பின் புகைபிடிப்பார்கள். இவை தூண்டுதல்கலாக இருக்கலாம். இதனை தவிர்க்கவும்.
மன அழுத்தத்தை நிர்வகிக்கவும்
மன அழுத்தம் உங்களை புகைபிடிக்கும் பழக்கத்திற்கு திரும்ப அனுப்பும். மன அழுத்த சூழ்நிலைகளைச் சமாளிப்பதற்கான வழிகளைக் கண்டறியவும்.
உணவில் கவனம்
புகைபிடிப்பதற்கு பதிலாக ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளவும். உங்களுக்கு புகைபிடிக்க வேண்டும் என்பது போல் இருந்தால், சட்டென்று மனதை மாற்றும் வகையில் உணவுகள் மீது கவனம் செலுத்துங்கள்.
ஆதரவு பெறவும்
நீங்கள் புகைப்பிடிப்பதை நிறுத்த விரும்புகிறீர்கள் என்றால் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து உதவி கேளுங்கள். மேலும் ஆலோசகரிடம் ஆலோசனை பெறவும்.