அன்றாட வேலை, குழந்தை கல்வி, நாட்டு நடப்பு, பொழுதுபோக்கு என அனைத்துக்கும் ஸ்மார்ட்போன் தான். இதனால் ஏற்படும் பாதிப்புகளை பார்க்கலாம்.
ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு உறவுகளுக்கிடையே எவ்வாறு விரிசலை ஏற்படுத்துகின்றன. சமூக நட்பில் இருந்து இது உங்களை விலக்கி வைக்கிறது.
ஸ்மார்ட்போன் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறியிருப்பினும், அதிக நேரம் மொபைல் போன்களை பயன்படுத்துவர்களின் உறவில் நேரடி தாக்கம் ஏற்படும்.
அதீத ஸ்மார்ட்போன் பயன்பாடு மக்கள் தங்களைச் சுற்றியுள்ளவர்களைப் பற்றித் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டமல் இருக்க வைக்கிறது.
ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதற்கென தனியாக காலக்கெடு ஒன்றை அமைத்து, உங்களை சுற்றியுள்ளவர்களின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்.
திடீரென ஏற்படும் மொபைல் சத்தம் மெய்நிகர் உலகத்தின் மீதான கவனம் திசைதிருப்புகிறது. நிஜ உலகில் உள்ளவர்களிடம் சரியாக தொடர்பு கொள்ள முடியாத நிலையை உண்டாக்குகிறது.